தெரிந்த, தெரியாத உலகங்களை இணைத்தல் : எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்யலாமா?
பிரார்த்தனை செய்யும்போது கீழ்க்கண்டவற்றை ஒரு நியமமாக மனதில் பதிய வைக்க வேண்டும் :
பிரார்த்தனை நம் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியை மேம்படுத்த செய்யப்பட்டால் அது நம் வாழ்க்கைப் பலனை எதிர்பார்க்கும் பிரார்த்தனையாகும்.
ஆத்மாவை அனுபவிக்க@ செய்யப்படும் முயற்சியை அதிகப்படுத்த செய்யப்படும் பிரார்த்தனையாக இருந்தால் அது அந்த பலனை எதிர்பார்க்காது செய்யப்படும் பிரார்த்தனையாகும்.
ஆன்மீகத்தில் முன்னேற முன்னேற ஒரு சாதகரின் பிரார்த்தனைகள் எவ்வாறு மாறுகிறது ? சில உதாரணங்கள் :
வாழ்வின் அங்கம் | நம் வாழ்க்கைப் பலனை எதிர்பார்த்து பிரார்த்தனை | @ நம் வாழ்க்கைப் பலனை எதிர்பார்க்காத பிரார்த்தனை (ஆன்மீக முன்னேற்றத்திற்காக) |
|---|---|---|
| இறைவா, நான் இப்பொழுது தான் நேர்காணல் முடித்தேன். எனக்கு இந்த வேலை கிடைக்கட்டும். எனக்கு இது மிகவும் தேவை. | இறைவா, நான் இப்பொழுது தான் நேர்காணல் முடித்தேன். இதன் முடிவை உங்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். உங்களிச்சைப்படி எது நடந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நீங்கள் தான் அருள வேண்டும். |
| இறைவா, நான் இவரைக் காதலிக்கிறேன். அவரும் என்னை அதே அளவு அல்லது அதற்கு மேலும் விரும்புமாறு செய்வாயாக. | இறைவா, உனக்குத் தான் தெரியும் இவர் எனக்கு உகந்தவரா என்று. என் விதிப்படிதான் எனக்கு வாழ்க்கைத் துணை அமையலாம் அல்லது அமையாமல் போகலாம். ஆனால் என் ஆன்மீக பயிற்சி தொடர்ந்து நடக்க அருள்வாயாக. |
| இறைவா, என்னால் இந்த நோயைத் தாங்க இயலவில்லை. என்னை குணப்படுத்து. | இறைவா, இந்த நோயைத் தாங்கும் சக்தியை எனக்குக் கொடு; அதன் மூலம் என் சிந்தனை சிதறாமல் நான் ஆன்மீக பயிற்சியை தொடர்ந்து செய்ய அருள்வாய். |
| இறைவா, என் குழந்தையைக் காப்பாற்று. நான் எது வேண்டுமானாலும் செய்கிறேன். என் குழந்தை காப்பாற்றப்பட்டால் அடுத்த மாத சம்பளத்தின் பாதியை நான் அநாதை இல்லத்திற்கு கொடுக்கிறேன் ! | இறைவா, என் குழந்தையின் நோய் முற்றிய நிலையில் உள்ளது. எங்களின் சக்திக்கு உட்பட்டதெல்லாம் செய்து விட்டோம். என்னைக் காட்டிலும் நீயே அவனை அதிகம் நேசிக்கிறாய். அவனை உன் சரணங்களில் சமர்ப்பிக்கிறேன். |
| இறைவா, இதுவே என் வாழ்வின் அதிகபட்ச வேதனை நிரம்பிய பகுதி. இதிலிருந்து என்னைக் காப்பாற்று. | இறைவா, இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடு. ஆன்மீக நிலையில் இதிலிருந்து நான் என்ன கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்க செய். என் ஆன்மீக பயிற்சி தடையில்லாமல் நடக்கட்டும். |
| பொதுவாக இல்லை. | இறைவா, தயவுசெய்து இன்பத்திலும் உன்னை நினைத்திருக்க செய். உன்னருளால் இது எனக்கு கிடைத்துள்ளது. துன்பத்தில் எவ்வாறு உன்னை எண்ணி ஏங்குகிறேனோ அதேபோல் இன்பத்திலும் உன்னை எண்ணி இருக்கும்படி செய். |
| பொதுவாக இல்லை. | இறைவா, ஆன்மீக பயிற்சியைத் தொடர இன்னொரு நாள் கொடுத்தமைக்கு உனக்கு என் நன்றி. உன்னிச்சைப்படி நான் உனக்கு சேவை செய்ய வேண்டும். என் ஆன்மீக பயிற்சியை அதிகப்படுத்தும் திறனை எனக்கு நீ தந்தருள்வாயாக. |
saran2sai