நான் ஏன் பிறந்தேன் ?

(ஸ்பிரிச்சுவல் சைன்ஸ் ரிசர்ச் பௌண்டேஷன் ) படித்ததில் இருந்து, மாற்றாமல், அப்படியே.... 

நான் ஏன் பிறந்தேன் ? 
நிறைய பேருக்கு தெரியாது. பலர் பல காரணங்களை யோசனை செய்தோ செய்யாமலோ சொல்வார்கள். ஆனால், ஆன்மிகம் சொல்வது என்ன ? 

இரண்டு காரணங்களுக்காக பிறவி (முதலோ அடுத்ததோ ) எடுக்கிறோம். 
1. முற்பிறவியின் முடித்து வைக்காத கணக்கை திரும்பி செட்டில் செய்ய.
2. அது முடிந்து விட்டால், விட்டால், அடுத்த பிறவி இல்லாமல் கடவுளுடன் ஐக்கியம் ஆக. 

முதலாவது : கடனோ அல்லது உதவியோ அல்லது பந்தமோ பெற்று விட்டு அதை திருப்பி செலுத்தாமல் ஒருவர் இறந்து விட்டால், அவர் அடுத்த பிறவிக்கு வந்து அதை திருப்பி செலுத்தும் கட்டாயத்தை உருவாக்கி கொள்கிறார். போன பிறவியில் யாரிடம் கடன் அல்லது உதவி அல்லது பந்தம் பெற்றாரோ அவர் இந்த பிறவியில் கடன் வாங்கியவரின் மகனாகவோ நண்பராகவோ பிறப்பார். கடனை எந்த வடிவத்தில் வாங்கினோமோ அதே வடிவில் தான் திருப்பி தருவோம் என்று கிடையாது ! பணத்தை அன்பாகவோ பாசமாகவோ கடமையாகவோ எந்த வகையிலாவது அதை திருப்பி தருவோம். 

ஒருவேளை திருப்பி தரும் அளவுக்கு இந்த பிறவியிலும் நமக்கு வசதி இல்லை என்றால், வேறு வகைகளில் அது தானாக செலுத்தப் படும். அதாவது கடன் வாங்கியவரை யாராவது அதே அளவுக்கு ஏமாற்றி இருப்பார்கள், அல்லது திருடு போய் விடும். ஒருவேளை அப்படி இல்லாவிட்டால், அவரை சில பேர் மட்டும் அதிகமாக வெறுப்பார்கள். இரண்டு பேருக்குமே தெரியாது ஏன் மற்றவர் நம்மை வெறுக்கிறார் என்று. 

ஆனால் இதை சரி செய்ய, கடன் வாங்கியவர் நன்றாக சிந்தித்தார் என்றால் அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். அதன்பின் அவர் முழு நம்பிக்கையுடன் மற்றவருக்கு பலன் எதிர்பாராமல் ( பணம் நேரம் உடல் உழைப்பு என தனது  சக்திக்குள்தான்) உதவி செய்தால் , அது குவிந்து யாருக்கு போய் சேர வேண்டுமோ அவர்க்கு போய்விடும். இது எப்படி ? 

இந்த பிரபஞ்சத்தின் (நவக்கிரங்களுக்கு இடையே வியாபித்து இருக்கும் ) ஆகர்ஷண சக்தி நமது மனத்தின் வழியே இதை செய்யும். நமது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் ரத்த ஓட்டமே இந்த ஆகர்ஷண சக்தியின் ஒரு பகுதி தான். மனம் என்பதே ஒரு மென்பொருள் [software] தான். அந்த சக்திக்கு எல்லோர் மனது எண்ணங்களையும் புரிந்து கொள்ளவோ இணைக்கவோ முடியும். இந்த ஆகர்ஷண சக்தியை நம் விருப்பப்படி பயன்படுத்த நம்மால் முடியாது. ஆனால் அவதாரங்கள் என்று சொல்லக்கூடியவர் மட்டும் இந்த சக்தியை கையாள முடியும். உதாரணமாக, ரமண ரிஷியும் சங்கராச்சார்யாரும்  தூரத்தில் இருந்தே அவரவர் சிந்தனையை பகிர்ந்து கொண்டதாக ஆன்மிக இலக்கியம் சொல்கிறது. 
இரண்டாவது காரணமானது நமது ஆன்மீக தேவையை பூர்த்தி செய்து நாமும் கடவுளாகவே மாறி விட்டு அடுத்த பிறவி எடுக்காமல் இருப்பது. அதாவது நமது ஆன்மீக சாதனை 70% இருந்தால் மறு பிறவி எடுக்காமல் இருக்கலாம். அந்த அளவு ஆன்மீக சக்தி இருந்து விட்டால், போன பிறவியின் கொடுக்கல் வாங்கல் பாக்கி இந்த பிறவியில் தீர்க்கப் போடாவிட்டாலும், ஆன்மீக சக்தியால், இறப்புக்கு பிறகு மகர லோகம் (ஓம் பூஹு , ஓம் புவஹ, ஓம் சுவஹ, ஓம் மகர, ஓம் தபஹ .... என உள்ள லோகங்கள் ) சேர்ந்து விட்டால் அங்கிருந்து கூட வேறு ஆன்மா மூலமாக அந்த கடனை அடைக்க முடியும் என்று சொல்லப் படுகிறது. 

ஆன்மீக சாதனை 70% இல்லாதவர்கள் (இது உலகில் 80% இல்லை) மீண்டும் பிறந்து தான் ஆக வேண்டும். ஆன்மீக சாதனையிலும் ஆறு கொள்கைகள் உள்ளன, அதன்படி சாதனா இருந்தால் மட்டுமே அந்த 70% கிடைக்கும். இல்லாதவர்கள் ஆன்மீக பயிற்சியில் முன்னேற முடியாமல் ஒரு வகுப்பிலேயே மீண்டும் மீண்டும் படிப்பது போல ஆகும். உலகிற்கு தீமை விளைவது குறைய வேண்டும், அழிய வேண்டும் என்று நினைக்கும் அந்த பெரிய ஆன்மா (70% சாதனா) வேண்டுமானாலும் மீண்டும் பிறவி எடுக்கும் சுதந்திரம் கிடைத்து மறுபடியும் மற்றவர் வாழ்க்கைக்காக பிறந்து வாழ முடியும். அது எல்லோராலும் முடியாது. 

நம் வாழ்க்கைக்கு தேவையான படிப்பு வேலை சம்பளம் இது ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கு இணையாக ஆன்மீக பயிற்சி மேற்கொண்டு வந்தால், ஒரு ஸ்டேஜ்-ல் வருமானம் ஈட்டும் தொழிலை விட்டு விட்டு முழுவது ஆன்மிகம் பக்கம் சாயும் வாய்ப்பு வரும். ஆன்மீக சாதனை என்பது நான் யார் கடவுள் யார் என்பது பற்றிய ஆராய்ச்சியே ; அதற்காக கடமை, ஞானம் வழியாக கடவுளை பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். வெறும் வேதம் படிப்பது பூஜை செய்வது மட்டும் ஆன்மிகம் ஆகாது. கடவுளின் மனது, சக்தி இரண்டையும் புரிந்து கொண்டு நாமும் மற்றவருக்கு கடவுளாக இருந்து தொண்டு செய்வதும் முக்கியம். இந்த நிலை வந்து விட்டால், நமக்கு வாழ்வில் எந்த குறிக்கோளும் இருக்காது, நடக்க வேண்டியது எல்லாம் தானாகவே நடக்கும். இது ஒரு சைக்கிள் . 

சரி, ஏன் மறுபடி பிறக்க கூடாது, பிறந்தால் என்ன ? வருவதை பார்த்துக் கொள்ளலாம். இதே போல ஒரு கஷ்ட ஜீவனம் மீண்டும் இருந்தால் என்ன ? சுகமும் துக்கமும் மாறி மாறி தானே வரும். பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கலாம். ஆனால் சமுதாயம் அப்படி இல்லை. அதில் குற்றம் செய்பவர்கள் பாவம் செய்பவர்கள் அதிகரித்து கொண்டே போவார்கள். மக்களுக்கு ஆன்மீக சக்தி சிறிதும் இல்லாமல் போகும் காலம் வரும். அப்போது துன்பங்களை சமாளிக்க முடியாது. ஒவ்வாருவரும் கெட்ட கர்மாவை ஏற்றிக் கொண்டே போவார்கள். 

உலகம் எவ்வளவுதான் பொருளாதாரம் டெக்னோலஜி என முன்னேறி இருந்தாலும், உலகத்தில் எல்லோருடைய  மகிழ்ச்சியின் அளவு  குறைந்து கொண்டே போகிறது. ஆகவே, நமது ஆன்மீக அளவை இப்பிறவியில் அதிகரித்து அடுத்த பிறவியை தவிர்ப்பது தான் நமது நோக்கமாக  இருக்க வேண்டும். 

(இது ஒரு வெறும் அறிமுகம் மட்டும்தான் ; அடுத்த பகுதி என்று எழுதுவேன் என தெரியாது !!)