நாங்க என்ன செய்யறது?

".. .. .. .. டூரிஸ்டுங்க இங்க கல்யாணத்துக்கோ   இல்ல கோவிலுக்கோ வரலை .. ..   ஊர் சுத்தி பாக்கிறவங்க காலைல 6 மணிக்கு கிளம்ப மாட்டாங்களா . நைட் தண்ணி அடிச்சுட்டு காலைல லேட்டா எழுந்து நல்லா டிரஸ் பண்ணிட்டு 10 மணிக்கு கிளம்புவாங்க சார். எதுக்கு சார் ..  ரிசார்ட் ல  காலைல சுடு தண்ணி உடமாட்டான். ஏமாத்துவான். காலைல 6 மணிக்கு சும்மா மூஞ்சு கழுவிட்டு வந்தாக்கா, ஊர் சுத்திட்டு சாயந்திரம் 5 மணிக்கு திரும்பி  வந்து குளிச்சிட்டு ஃபிரெஷ் ஆக இருக்கலாம் இல்ல சார்... ரோட் ல நல்ல நெரிசல் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே திரும்பிடணும் . ........... "

"...........சார், மூணாறு முனிசிபாலிட்டி தான் இந்தியாவில 50 கிமீ சுற்று வட்டாரத்தில் 100 இடங்களுக்கு மேலே பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிற சுற்றுலா இடம் சார். சம்மர் ல நல்ல வருமானம் வந்தா கூட எங்களால் ஓட்ட முடியல. கூட்டம் தாங்க முடியலே. 

எந்த பக்கம் போனாலும் க்யூ சார். சில சமயம் ரோட் ல அப்படியே ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் டிராஃபிக் ஜாம் ஆகி நிக்கறோம் .. அடுத்து போக வேண்டிய இடம் எல்லாம் போக முடியல. வர்ற டூரிஸ்டுங்க முணுமுணுக்கராங்க . நாங்க என்ன சார் செய்யறது.. .. .. .. ".  மேலும் வேறு என்ன செய்யலாம் ?