யார் ஏழைகள் ?

இவர்களே எல்லா விதங்களிலும் ஏழைகள் 

  1. தினமும் டி.வி. அல்லது மொபைல் போன் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
  2. எந்த இலக்கு, இலட்சியம் இல்லாமல் ஏதோ ஒரு வேலை, பொழுதுபோக்கில் இருப்பார்கள்.
  3. முடியாதவற்றைப் பற்றி விமர்சனம், கேலி  செய்வார்கள் 
  4. மாறுவதற்கு மாற்றிகொள்வதற்கு பயப் படுவார்கள்.
  5. மற்றவர்கள் மேலே எரிச்சல், பழி கொள்வார்கள்.
  6. என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து யோசிக்க மாட்டார்கள். 
  7. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று விறைப்பாக இருப்பார்கள். 
  8. அவர்கள் பிரச்சனைக்கு யார் காரணம் என்று அறிந்து அவர்களை கோபிப்பார்கள். 


இவர்களே எல்லா விதங்களிலும் பணக்காரர்கள்.

  1. தினமும் படிக்கிறார்கள்
  2. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஒரு இலக்கு/AIM , லட்சியம்/GOAL  வைத்துக் கொள்கிறார்கள்  
  3. மற்றவர்களையும் தங்களையும் அடிக்கடி பாராட்டுகிறார்கள். 
  4. தாங்கள் மாறவேண்டி இருந்தால் (மனம், முடிவு, அறிவு, கல்விமுன்னேற்றம்,..) சீக்கிரம் மாற்றிக் கொள்கிறார்கள். 
  5. தங்கள் தவறுகளை மறக்காமல், மற்றவர் தவறுகளை மன்னித்து விடுகின்றார்கள். 
  6. மனிதர்களை பற்றி யோசனை செய்யாமல், கருத்துக்கள், கொள்கைகள், பாடங்கள், அர்த்தங்கள் பற்றி யோசிக்கிறார்கள். 
  7. தொடர்ந்து கற்றுக் கொள்கிறார்கள். 
  8. செய்யாமல் விட்டவை செய்து தவறு ஆனவைகளுக்கு தாங்களே  பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்கள்.