பூர்ணாலயம்-7: வேதம்-உபநிஷத்-கீதை


(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; (வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது)
கூடுதல் குறிப்பு நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 

ஆடியோ 4 : 

இறைவனை எவ்வளவு புரிந்து கொள்கிறோமோ அவ்வளவு பக்தி வளர்கிறது. புரிந்து கொள்ளும் அறிவின் அடிப்படையில்தான் நமது உணர்வு செயல்படுகிறது ; நிஷ்காம்ய பக்திக்கு என்ன காரணம் ? 

        1. உலகத்தைப் பற்றிய ஞானம் , உண்மை தன்மை ; உலகம் (நேரம், பொருள்கள் , உயிர்கள், உறவுகள் ) நிலை அற்றது ; உலகம் இன்பம் துன்பம் இரண்டையும் தருகிறது. வேதத்தில் வைராக்கியம் என்ற சொல்லுக்கு பொருள் : இந்த உலகில் உள்ள எதுவும் என்னை திருப்தி படுத்தாது ; இந்த அறிவு தான் இவருக்கு பக்தியை தரும். ("மசான வைராக்கியம்" = "சீ, சீ, இந்த பழம் புளிக்கும்") ; வாழ்வில் கிடைத்த அனுபவங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

        2. இறைவனைப் பற்றிய ஞானம் : கடவுள் (சமஸ்கிருதம்: ஈஸ்வரன்) என்பது யார் ? சாஸ்திரம் என்ன சொல்கிறது ? நாம் இருக்கும் உலகம் பிறக்க (காரியம்) யார் காரணமோ அதுவே கடவுள். ஜகத்-காரணம் . உலகம் : காரியம். உலகம் ஒரு பானை ; அதை செய்த கடவுள் தான் குயவன். தானே (குயவன்) தன்னில் (களிமண்) இருந்தே கடவுள் (ஜகத்-காரணம்) உலகத்தை (காரியம்) படைத்தான். காரணம் >> 1. உபாதான  காரணம் (களிமண்), 2. நிமித்த காரணம் (கடவுள்). உதாரணம்; சிலந்தி தன் உடம்பில் இருந்தே திரவம் எடுத்து சிலந்தி வலையை பின்னுகிறது. 3. அனைத்தையும் உற்பத்தி செய்த இறைவன்  "சர்வக்ஞஹ", சர்வ சக்திமான். இந்த நான்கு வகை (இறைவனைப் பற்றி) காரணத்தை நிஷ்காம்ய  பக்தன் அறிவான். இவ்வாறு , நிஷ்காம்ய  பக்தன் ஓரளவு இறைவன் / இறை பக்தி அறிவு பெற்று கர்ம யோகி யாக இருக்கிறான். சகாம பக்தன் கர்ம யோகி ஆக இருக்க முடியாது. (கர்ம யோகம் : நமது கடமைகளை எந்த பாவத்தில் (தொனி, உணர்வு ) செய்ய வேண்டும்) 
கடமை செய்யும் பொது நாம் கர்த்தா; அனுபவத்தை/பலனை அடையும் பொது நாம் போக்தா . இங்கு, இந்த ஒரு நிமிட ஆடியோ கேட்கலாம் :  https://youtube.com/clip/UgkxnHv8QKtgyIVJJ5vVDKO_o2fSMDSIrBPN?si=PllJ6mUB36DhO9uv
ஏற்கனவே படித்தது போல, கடமையை பகவானுக்காக செய்கிறோம், மற்றவருக்காக இல்லை. நல்ல அனுபவம் வரும்போது இறைவன் மீது நன்றி உணர்வு வர வேண்டும். இல்லாவிட்டால், வாய்ப்பு வந்ததற்கும் நன்றி  சொல்ல வேண்டும். இதன்பின் கர்மயோகி கடமைகளை குறைத்துக் கொள்வான். அதாவது தியானயோகியாக மாறுவான். இதனால் அதிக நேரம் என்னும் சொத்தை சேகரிப்பான். கீழே உள்ள அட்டவணையை ஒப்பிட்டு பார்க்கலாம் : 
வயது            நிறைய இருப்பது✓      குறைவாக இருப்பது×  
20-40                  நேரம், சக்தி✓                                             பணம் × 
40-60                   சக்தி, பணம்✓                                             நேரம்×      
60-க்கு மேல்    நேரம், பணம்✓                                            சக்தி×   

கடினமான ஆன்மிக பயிற்சிக்கு நேரம் செலவழிக்க வேண்டும் : மனக்கட்டுபாடு, மௌனம், விரதம், இந்திரிய விரதம், இவற்றிற்காக. 
இவ்வாறு கடமையை விட்டு விட்டு வந்தால் "என்னை யார் காப்பாற்றுவார்" என கேட்டால், பகவான் கீதையில் சொல்வது "யோக சேஷமம் நான் தருவேன்" (உன் வயதுக்கு என்ன தேவையோ அதை தந்து அவற்றை காப்பாற்றுவேன்!) இந்த உண்மையை உணரவே யாத்திரை செல்ல வேண்டும் என்று சொல்வார். அதாவது கையில் காசு இல்லாமல் யாத்திரை சென்றால், நமக்கு யாத்திரையில் இருக்க என்ன அவசியமோ அது யாத்திரையில் கிடைக்குமாம். 

இங்கு இந்த ஒரு நிமிட ஆடியோ கேட்டால் மேலே சொல்லப்பட்ட பக்தி வகை பற்றி இன்னும் புரிந்து கொள்ளலாம்:  https://youtube.com/clip/Ugkxxz5tYxFtuKwxWooxBvx5QHHpJn6UhWMt?si=KYJk2x82YmPFIOQQ 

இவனே நிஷ்காம பக்தன் ;  
இவனுக்கு பக்தி தோஷம் எதுவும் கிடையாது. இவன் பக்தியை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம், பூஜையை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். இவன் அடுத்த படிக்கு எப்படி செல்வான் ?   (அடுத்த பகுதி லிங்க்)