பூர்ணாலயம்-5: வேதம், உபநிஷத், கீதை
இணைய தளம் : https://www.poornalayam.org/classes-recorded/
(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )
கூடுதல் குறிப்பு : நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும்.
2. பக்தியோகம்: ஆடியோ -2 தொடர்ச்சி
நாம் சிலவற்றை நம்பாமல் இருப்பதன் காரணம், நம்பிக்கைக்கு எதிராக உண்மை இருப்பதே. "சூரியன் அங்கேயேதான் உள்ளது பூமிதான் நகர்கிறது" என்று சொன்னால் அதைப் பற்றிய அறிவு வரும் வரை, யாரும் நம்பவில்லை அல்லவா ? இறைவன், சாஸ்திரம், வேதம் விஷயத்தில் முதலில் நம்பிக்கை தான் வேண்டும். கடவுள் இல்லை என்று சொல்வதும் நம்பிக்கை தான், அது அறிவு அல்ல, ஏனென்றால் பிரபஞ்சம் முழுவதும் தேடிப்பார்த்த பிறகுதான் ஒருவர் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும்.
ஆகவே, அறிவும் பக்தியும் பாதையாக சென்று, இறுதியில் பக்தி என்ற குறிக்கோளை அடைய வேண்டும்.
மேலே சொன்னவாறு பக்தி இரண்டு வகைப்படும். சாத்திய பக்தி, சாதனா பக்தி. கடவுளிடம் வேண்டும்போது அவர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் ; பக்தன் ஒரு பொருளை வேண்டினால் அது சாதனா, கடவுள் அதை சாத்தியம் ஆக்குகிறார். பக்தன், பகவான், இலட்சியம். நமது அன்பு (நம்மீது, கடவுள் மீது, இலட்சியம் மீது) இவ்வாறு மூன்றாக பிளவு படுகிறது. இந்த அன்பின் அளவு என்ன ? யார் மீது எவ்வளவு ? இந்த வரிசையில் தான்!! : நாம், இலட்சியம், கடவுள். இலட்சியம் அடையும் வரைதான் கடவுள் மீது அன்பு இருக்கும். பழம் நன்றாக இருக்கும் என்பது பழத்தின் தோல் மீது உள்ள நம்பிக்கை, அக்கறை, இவற்றால் தான், தோலில் இருந்து பழத்தை வெளியே எடுக்கும் வரைதான். வெளியே காட்டும் பக்தியை வைத்து ஒருவருடைய இயல்பான குணம், பண்புகளை எடை போடுவது தவறு.
அடுத்தது நிஷ்காம பக்தி : பகவானை அடைய பகவானை வேண்டுவது. மூன்றாவது பக்தி பக்தன் தன்னை பகவான் சொரூபமாக நினைக்க வேண்டும். அப்போது பிளவு இல்லாத அன்பு தன் மீது (கடவுள் மீது) இருக்கும்.
ஆடியோ 3
சகாம பக்தி : இறைவனை வைத்து சாதனா ஆரம்பிக்கிறோம் : இரண்டு வகை : 1. ஆர்த்தஹ பக்தன் 2. அர்த்தார்தி பக்தன்.
1. ஆர்த்தஹ : துயரம் வரும்போது மட்டும் கடவுளை வேண்டுபவன். சுகப் பிரார்த்தி!! ; மற்றும் துக்க நிவர்த்தி !! இந்த மாதிரி பக்தனை கடவுள் நேசித்தால் சோதனை தான் செய்வார் ! அவனது பிரார்த்தனை பலிக்காது ! இல்லாவிட்டால் பிரார்த்தனை பலிக்கும், ஆனால் பக்தன் கடவுளை உடனே மறந்து விடுவான்.
இதை வைத்தே நாம் எந்த மாதிரி பக்தன் என நாம் தெரிந்து கொள்ள முடியும் . குந்தி தேவி தான் எப்போதும் கடவுளை நினைத்திருக்க எப்போதும் எனக்கு கஷ்டம் கொடு என வேண்டினாளாம் . இவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது இலட்சியம் அல்ல, இறைவனை அடைவதும் இலட்சியம் அல்ல. "ஆர்த்தஹ".
2. அர்த்தார்தி பக்தன். சுகம் துக்கம் இரண்டிலும் ஆண்டவனை நினைப்பவன். மகிழ்ச்சியாக இருக்கும் போதும் நன்றி சொல்லுவான். ஆனால் ஆண்டவன் வணங்கும் யாவரையும் பக்தன் ஆக ஏற்றுக் கொள்கிறான். மேலே சொன்ன இவர்கள் இருவருக்கும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது இலட்சியம் அல்ல. இறைவனை அடைவதும் இலட்சியம் அல்ல. ஆசையும் பயமும் இவர்கள் பக்திக்கு காரணம். முயற்சி மட்டும் போராது, இறைவனது அனுக்கிரகம் தேவை என்று இவர்களுக்கு தெரியும். இறைவன் கர்ம பலன் தாதா என தெரியும். நமது அகங்காரம் வேலை செய்யாது எனவும் தெரியும். ஆனால், இறைவனின் தத்துவம் தெரியாது.
தங்கள் குணத்திற்கு ஏற்ப சத்துவ (மலர், பாடல் தந்து ) , ரஜோ (உதட்டில் வேல் குத்துவது) , தமோ (பலி, மது கொடுத்து) போன்ற மூன்று குணத்தில் பக்தி செலுத்துவார்கள். அவர்கள் சகாம பக்தர்கள். இவர்கள் தர்மவானகவோ அதர்மவானகவோ இருக்கலாம். அசுரர்களும் பக்தர்களே . பகவான் எல்லா கர்மாக்களுக்கும் பலன் தருவார்.
இந்த இரண்டு பக்தனில் இருந்து எப்படி முன்னேறுவது ?
சகாம பக்தர்கள் தர்மவான் ஆக மாறிய பின்தான் நிஷ்காம பக்திக்கு வர முடியும். நிஷ்காம பக்திக்கு வந்த பின்னரே ஒருவர் ஆன்மீகத்தில் நுழைவார்கள். இவர்களுக்கு ஜிக்நாசூ என பெயர். அதன் பின்னரே ஞானி ஆக வாய்ப்பு வரும். ஜிக்நாசூ : இவர்களின் இலட்சியம் என்ன ? தன்னை தகுதி படுத்தி கொள்ள வேண்டும் என தெரியும். என்னிடத்தில் உள்ள பலகீனம் என்ன என்று வேண்டுவார்கள். குணபரிவர்த்தனம் தேவை. அதற்கு என்ன சூழ்நிலை தேவை ? தன்னை (தன் குணத்தை) மாற்றிக்கொள்ள ஏதாவது வசதி கேட்டால் அது ஆசை ஆகாது.
இந்த நிஷ்காம (இறைவனே சாத்தியம்-Path , அவனே சாதனம்-Goal ) பக்தர்களுக்கு குறிக்கோள் என்ன ?

