பூர்ணாலயம் -3: வேதம் உபநிஷத் :
(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )
கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும், வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது.
கூடுதல் குறிப்பு : நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். லிங்க் https://outlook.gseva.org/2024/11/poornalayam-swamy-gurubarananda-vedha.html
ஆடியோ 5
3. தபஹ : அவ்வப்போது உலக வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்து பிறகு அதையே எப்போதும் பயிற்சி செய் . ஓய்வு அடைந்த பிறகு எல்லா பொறுப்பையும் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்தல். ஜபம் தியானம் இரண்டையும் எப்போதும் செய்தல் . மேலே சொன்ன நியதம் கர்மா இத்துடன் முடிந்தது.
காம்ய கர்மம் : ஓய்வு அல்லது மகிழ்ச்சி அடைய நாம் செய்து கொள்ளும் வேலைகள்; இவை அளவாகவும் தர்மமாகவும், மற்றவருடன் பிரசாதம் போலவும் பகிர வேண்டும். விரைவில் எவ்வளவு என்ஜாய் செய்ய முடியுமோ அவற்றை செய்து விட வேண்டும் என்ற ஆசையை துறக்க வேண்டும். இதற்கு போகம் "ஈஸ்வர ஸ்மரணம்" ஆகுதல் என்று பெயர்.
பிராயஸ்சித்த கர்மா : தொடர்ந்து எதிலும் வெற்றி பெறவில்லை என்றால் மனம் நோகாமல் அது இறைவனின் முடிவு என விட்டு விட வேண்டும். நம்மை நாமே திருத்திக் கொள்ள கடவுள் தந்த வாய்ப்பு என கொள்ள வேண்டும்.
நிஷித்த கர்மா : செய்ய வேண்டாதவற்றை செய்ய கூடாது.
கர்மாவை சிரத்தை இன்றி வற்புறுத்தலால் செய்வதும் சரியாக செய்வதும் வேறுபாடு என்ன : கர்மாவை செய்வதால் தோல்வி அடைந்து விட்டோம் என எண்ணம் வருதல் ஆகாது. கடமையை கர்மாவாக செய்வதால் எதிர்பார்ப்பு இல்லை. சரியாக சர்ஜரி செய்தும் நோயாளி இறந்தால் அது கடமையில் தோல்வி ஆகாது. விபரீத பலன் இல்லை. கர்மா முடிவுராமல் பலன் இல்லை என்றாலும், கர்மயோகத்தால் பலன் உண்டு.
கர்மயோகம் நமது மனதில் இருந்து எல்லா விருப்பு வெறுப்புகளையும் நீக்கி, (அதாவது செய்த கர்மாவால் இன்னும் பலன் காண ஆசை வந்தாலும்) ஞானம் வர உதவி செய்யும். மனதுக்கும் மூளைக்கும் சக்தி தரும். தற்காலிக நிலையில் இருந்து முழுமையான நிலை அடைய கர்மயோகத்தில் தர்மமும் சேர வேண்டும். இத்துடன் கர்மயோகம் கட்டுரை முடிந்தது. அடுத்து பக்தியோகம்.

