பூர்ணாலயம் -19: வேதம் உபநிஷத்-கீதை



(சுருக்கமான விளக்கமும், சில சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; (வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது)
கூடுதல் குறிப்பு நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 

தலைப்பு : யாருக்கு விடுதலை ? 

ஆடியோ-5 

ஆன்மா என்பது அறிவு/உணர்வு சொரூபம் - நமக்கு உடல் + மனம் உள்ளது என்பதை காண்பிப்பது உணர்வு - சித் சொரூபம் அல்லது சைதன்ய என சொல்லலாம். - எது ஆத்மா அல்ல ? உடல் உறுப்பு அல்ல - உடலில் இருந்து தோன்றவில்லை - உடலின் தன்மை இல்லை - உடலைப்  ப்ரகாசப் படுத்துகிறது - அனாத்மா மாறிக் கொண்டே உள்ளது , இதை அறிவு/உணர்வு பார்த்துக் கொண்டே (மாறாமல், நிர்விகாரம்) உள்ளது - மாற்றம் அடைவது அநித்தியம் - எது நித்யம், அது சத்யம்? - ஆத்மா  சத், சித் சொரூபம் = நித்தியம் + அறிவு சொரூபம் , என்றும் இருப்பதால் ஆனந்தம் ; மித்யா : myth : கானல் நீர் போல - அனாத்மாவை "நான்" என்னும் பொருளில் இருந்து நீக்க வேண்டும் - 'நீக்க'= 'மறக்க' - பிறகு தன்னை பரமாத்மாவுடன் ஒன்றாக்குதல் - உடல் போலவே, ஸ்தூல உலகம் / ஸ்தூல பிரபஞ்சம் + ஸ்தூல சூக்ஷமம் + காரண பிரபஞ்சம் (மாயை). மாயை பரமாத்வாவை சார்ந்து உள்ளது. உடலை நாம் மனம் ஆன்மா என எண்ணியது போலவே  கடவுளையும் தவறாக சேர்த்து வைத்து உள்ளோம், ஆகவே, அதையும் பிரிக்க வேண்டும் - ப்ரம்ம தத்வம் மாயா தத்வத்தையும் கலந்து பார்த்தால் அது ஈஸ்வரன் - பிரம்மத்தின் மேலே உள்ள மாயையை பிரிக்க வேண்டும் - பிரம்மத்தின் இலட்சணம் : சத்யம், ஞானம், அனந்தம் -  ஆகவே இவை மூன்றும் அல்லாததை (மாயை) நீக்க வேண்டும் - "ஆத்மாநம் அயம் அஸ்மி" : அதாவது உடலை நீக்கிய ஆன்மாவும், மாய உலகை நீக்கிய பரமாத்வாவும் ஒன்று என உணர்தல் - மகா வாக்கியம்: "அஹம் பிரம்மாஸ்மி"  - அதை அறிந்ததால் என்ன பலன் ?  NEXT