பூர்ணாலயம் -18: வேதம் உபநிஷத்-கீதை



(சுருக்கமான விளக்கமும், சில சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; (வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது)
கூடுதல் குறிப்பு நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 

தலைப்பு : யாருக்கு விடுதலை ? 


ஆடியோ -3 லிங்க் 

அறியாமையின் மூன்று காரணம் சென்ற பகுதியில் பார்த்தோம். கயிரை பாம்பாக தவறாக எண்ணினோம். - அறியாமை நீங்க அறிவுதான் பாதை - இருப்பதை காட்டுவது - அறிவு எதையும் உற்பத்தி செய்யாது , அறியாமை ஒன்றை அழிக்காது - இது ஞானத்தின் சொரூபம் - 

சனத்குமாரர் நாராதரிடம் சொன்ன சில வழிகள் - அறிவுக்கு சாதனம் விசாரம் - விசாரம், அதன் தேவை என்ன ? - புலன் வழியாக புரியாததை விசாரம் செய்ய வேண்டும் - நமக்கு தெரிந்த முடிவும் ஆனால் உண்மையும் வேறு வேறாக இருக்கும்போது ("விபரீத ஞானம்") விசாரம் தேவை - நான் யார் என்ற விசாரம் - 
விசாரம் செய்ய இலக்கணம் உண்டு - audio break min  31:20 - குருவிடம் சாஸ்திர முறைப்படியும்  ஒவ்வொரு நிலையிலும் சொந்த ஆராய்ச்சியும் தேவை. 

விசாரத்திற்கு ஆதாரம் நம்பிக்கை, சிரத்தை - குருவின் வாக்கியமும் நமது அனுபவமும் ஒன்று சேர வேண்டும். அதனால் ஞானத்தை தரும் - சிரத்தை வர என்ன செய்வது ? - சேவை, தொண்டு  இருந்தால் சிரத்தை வரும் -  உபநிஷத் உபதேசம் பெற்று பலன் அடைந்தவரை பார்த்தால் தான் சிரத்தை வரும் - குருவிடம் தான் ஞான பலனை பார்க்க முடியும் - வினயம் தரும் சேவையை செய்ய வேண்டும் - ஈகோ வை தகர்க்கும் சேவையை செய்ய வேண்டும் - சேவையால் பெற்ற  அறிவு தான் நிலைத்து இருக்கும் - குருவின் மனதில் கிருபையை  உற்பத்தி செய்யும் சக்தி சிஷ்யனிடம் தான் உள்ளது. - இவ்வாறு செய்தால் நம் மனதின் நாம் என்ற அகங்காரம் நீங்கி ''நான் யார்'' என்பது ''யார்'' ஆகும். 


கர்மா பலன் அல்லது குருவுக்கு செய்யும் சேவையால் நமக்கு சரியான சிரத்தை கிடைக்கும். - சேவைக்கு பலம் தேவை - என்ன பலம் ? ஆரோக்கியம், (அஹங்காரம் இல்லாத) மனோபலம் - நல்ல ஆகாரம், நல்ல ஆசனங்கள் தேவை - கர்ம யோகம் மனோபலத்தை தரும் - மனோபலத்திற்கு மனதை குவிக்கும் தியானம் தேவை - 

ஆத்மானம் : நான் யார் என்பதில் குழப்பம் - நான் வேறு, என்னுடையது வேறு - நான் என்பது  பல சமயத்தில் வேறு வேறு பொருள் அல்லது கருத்துக்கு உதாரணமாக உள்ளது - 1.ஆன்மா, 2. ஆன்மா அல்லாதது , இரண்டு பொருளின் சேர்க்கை தான் நான் -  சரீரம், உடல்தான் ஆன்மா அல்லாதது , அனாத்மா - உடலை மூன்றாக பிரிக்கலாம் : 1. ஸ்தூலம், 2. சூக்ஷமம் (வெளியே தெரியாத மனம்) , 3. இது இரண்டுக்கும் காரணமான காரண சரீரம் (விதை போல ) 

1.ஸ்தூல சரீரம் ஐந்து பஞ்ச பூதத்தால் ஆனது - எதற்கு இந்த ஸ்தூல சரீரம் அல்லது வகை ? சுகம் துக்கம் அனுபவிக்க - இந்த உடல் நமது கர்ம வினைப்பயனின் பலன் -ஸ்தூல விகாரம் ஏன் ? காரணம் : 1. கரு , 2. பிறப்பு, 3. வளர்த்தல், 4. மாற்றங்கள், 5. தேய்தல், 6. மரணம் .  

2. சூக்ஷம சரீரம் : காரணம் சூக்ஷமமான பஞ்ச பூதம். - போகத்திற்கு கருவி - ஏற்கனவே உள்ள பதிவுகள் உடன் நம் மனது வந்துள்ளது - 

3. காரண சரீரம் : கர்மவினையின் ஸ்டோர் ரூம் - பழைய பதிவுகள். 

மேலே உள்ள மூன்றும் அனாத்மா .  அடுத்து ஆத்மா, ஆன்மா