பூர்ணாலயம்-13 : வேதம் உபநிஷத்-கீதை



(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
 நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 


ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு என்ன சாதனை செய்ய வேண்டும் ? 
ஒவ்வொரு வேதத்தின் கடைசி பகுதியே வேதாந்தம், அதுவே - உபநிஷத். கடைசி நிலையான ஞானத்தையும், ஞான நிஷ்டையும் தரக்கூடியது தான் உபநிஷத். -  நான்கு நிலையை கடந்தவர் உபநிஷத் புரிந்து கொள்ள முடியும். ஒரு உபநிஷத்தில் 12 முதல் 400-500 மந்திரம் சேர்ந்தும் உள்ளது. - 

ஆதி சங்கரர் விளக்கம் தந்த 18 உபநிஷத் படித்தாலே போதும். இந்த நிலைகள் மாண்டூக உபநிஷத்தில் விளக்கம் பெறுகின்றன. உபநிஷத் என்பது குருவும் சிஷ்யனும் பேசிக்கொள்வது. " எது சிறந்த முழுமையான அறிவை தருமோ, அது எனக்கு தாருங்கள்" !!

நாம் அறியும் அறிவு : மேலான அறிவு : பரா வித்யா,  கீழான அறிவு : அபரா வித்யா.  ஆச்சர்யமான பதில் : நான்கு வேதங்களும் கீழான அறிவுதான். பரப்ரம்மத்தை (மெய்ப்பொருள்) எது கிரகிக்குமோ,  அடையுமோ அதுவே பரா வித்யா. அபரா வித்யா மூலம்தான் பரா வித்யாவை அடைய முடியும். 

மந்திரத்தின் பொருள் : சத்துவ குணத்தை கொண்ட ப்ராஹ்மணன், பொருள் உயிர்கள் ஆகியவற்றின்  லோகங்களை, தனது சேர்த்துவைத்த வினைப்பயனால்  வந்த அனுபவத்தை, ஆராய்ச்சி செய்து, வைராக்கியம் அடைகின்றான். அதாவது   நிர்வேதமாயான் என பெயர் பெறுகிறான். 
நிர்வேதமாயான் மனதில் இந்த சிந்தனை ஓடும் : "நாஸ்தி அகருதக க்ருதேன" : உருவாக்கப்படாததை  (சுயம்பு)  நிலையான செயலினால் அடைய முடியாது ! அறிவினால்தான் அடைய முடியும், அறிவுதான் தேவை என அறிதல். அதற்கு இந்த மெய்ப்பொருளை (பரப்பரம்மத்தை ) எப்படி அடைவது ? குருவை நாட வேண்டும். அதற்கு, குருவும் சீடனும்  எப்படி இருக்க வேண்டும் ? யார் குரு ? 1. முறையாக சாஸ்திரம், சம்பிராதயப்படி பயின்று இருக்க வேண்டும். 2. அந்த அறிவில் நிலையானவன். இதன் சூத்திரம் மற்றும் விளக்கம், அடுத்த பகுதியில்.