பூர்ணாலயம் -11: வேதம் உபநிஷத்-கீதை Religion to Philosophy



(சுருக்கமான விளக்கமும், சமஸ்க்ரித வார்த்தைகளும்)
(ஆடியோ கேட்டு தெரிந்து கொண்டவைகளை 
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )

கூடுதல் குறிப்பு : நாம் தெரிந்து கொண்டதை மற்றவருக்கு சொல்லும்பொது சமஸ்க்ருத வார்த்தையை சேர்த்து சொன்னால் கருத்துக்கு  மதிப்பு அதிகம். ஆகவே ஒரு கருத்தின் தலைப்பை (ஒரு சில வார்த்தைகள் மட்டும்) சமஸ்கிருதத்தில் நினைவு வைப்பது நல்லது; (வாக்கியத்தை அல்ல, அது நம்மால் முடியாது)
கூடுதல் குறிப்பு நேற்றைய கட்டுரையை மீண்டும் இப்போது படித்துவிட்டு வந்தால் இன்றைய கட்டுரை நன்றாக புரியும். 


அடுத்த அத்தியாயம்/தலைப்பு  : 


ஆடியோ 1 : மனிதனது இலட்சியங்கள்: 1. அறம் , 2. பொருள் , 3. இன்பம், 4. வீடு. ஒவ்வொருவரும் இவற்றில் ஏதாவது ஒன்றை   முதலில் சொல்வார்கள். இதில் பொருள் பற்றி முதலில் பேசலாம். 

        மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்ள நாடுகின்றான். வாழ்வதற்கு அடிப்படை தேவை முதலில் வருவது பொருள்தான். ஆனால் வெறும் பொருளை மட்டும் பெற்று விட்டால் அவன் மகிழ்ச்சியாக இருப்பது இல்லை. சிறையில் இது கிடைக்கும். ஆனால் அது மட்டும் போதுமா ! அதாவது முதலில் பசிக்கு ஏதாவது கேட்பான், ஆனால் அடுத்து சுவையான உணவு கேட்பான். சிறைச்சாலையில் இன்பம் இல்லை. பாதுகாப்பை தாண்டி மற்ற இன்பங்கள் துய்க்க ஏங்குகிறான். அடுத்து புண்ணியம் தேட முயல்கிறான். அது பொருள் பாதுக்காப்பும் இன்பமும் தரும் என நினைக்கிறான் அதுவே அறம் . புண்ணியம்தான் ஒரு பொருளையும் / இன்பத்தையும் மனிதனையும் இணைக்கும்; பாபம் பிரிக்கும். கடைசியாக வருவது மோட்சம் / விடுதலை அடைதல். எதில் இருந்து விடுதலை ? துயரத்தில் இருந்து , அதாவது மனது நிறையாத துயரம். மனது நிறைந்து விட்டால் துயரம் இல்லை. அதுவே மோக்ஷம். 

மேலே சொன்ன அறம் , பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் "புருஷார்த்தஹ " எனவும் அதை இரண்டாக சாதன புருஷார்த்தம் ; சாத்திய புருஷார்த்தம் என பிரிக்கிறோம். சாதன : புண்ணியம் + பொருள் ;  சாத்திய  : காமகஹ + மோக்ஷக ; புண்ணியம் செய்வதும் பொருளை எதிர்பார்த்து தான். பொருளும் இன்பத்திற்காகவே நாடப்படுகிறது. சிலபேரது இலட்சியம் மட்டும் இன்பத்தில் இருந்து மோக்ஷத்திற்கு நாடுகிறது. இதற்கு பெயரே "மதத்தில் இருந்து தத்துவத்திற்கு" என்கிறோம்.  அதாவது இன்பத்தை துறந்து மோக்ஷத்தை நோக்கிய இந்த பயணம் நீண்ட பயணம் ஆகும். 

வேதாந்தம், சாஸ்திரம் என்பது திசை தெரியாத காடு போல. அப்பப்போது நாம் எங்கு இருக்கின்றோம் என சோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த இன்பம் ஏன் வேண்டாம் என சொல்கிறான், ஏன் மோக்ஷம் தேடுகிறான் என்பது பற்றியே இப்போது நாம் படிக்கிறோம். மோக்ஷத்திற்கும் தேவை இதே புண்ணியமும் அர்த்தமும் தான். பெரிய இலட்சியத்திற்கு ஆரோக்கியமும் இளம் வயதும் தேவை. உபநிஷதங்கள் படிக்க ஆரம்பிக்கும் முன் சொல்லப்படும் ஷாந்தி மந்திரங்களில் இந்த ஆரோக்கியமும் காலமும் (இளம் வயது) இரண்டும் வேண்டப்படும். 

யார் மதத்தில் இருப்பவர்கள், யார் தத்துவத்தில் இருப்பவர்கள் ? அறியாமை இரண்டிலும்  உண்டு. மதவாதிகள் ஆன்மிகவாதிகள் அல்ல. மதவாதிகளுக்கு இலட்சியம் இன்பம்தான். அவர்களது சாதனை தர்மம். எல்லா மதங்களிலும் இன்பத்தை தர்மத்துடன் (நியாயம், அஹிம்சா, நேர்மை) அனுபவிக்க இலட்சியம் உள்ளது. தர்மம் இல்லாத புண்ணியம் இல்லாத இன்பம் எந்த மதத்திலும்  வராது

 யார் தத்துவத்திற்கு, ஆன்மிகத்திற்கு வந்தவர்கள் ? இவர்களுக்கு சாதனை தர்மம், சாத்தியம் மோக்ஷம். திடீரென்று ஒருவர் மதத்தில் இருந்து தத்துவத்திற்கு மாற முடியாது. சாத்தியத்தில், இலட்சியத்தில் மாற்றம் திடீர் என நிகழாது. இடையில் சில மாற்றம் வேண்டும். "This road, less travelled ", அல்லது "This road less, travelled" என ஆங்கிலத்தில் சொல்வர்.  நாம் இப்போது அந்த மாதிரி பாதையில் செல்ல போகிறோம். கடைசி நிலை வரை மனிதன் என்னென்ன படிகளை கடப்பவன் ? NEXT