பூர்ணாலயம் -2: வேதம் உபநிஷத் :
இணைய தளம் : https://www.poornalayam.org/classes-recorded/
(வீடியோ பார்த்து தெரிந்து கொண்டவைகளை
எனக்கு நினைவு படுத்தவே இந்த குறிப்புகள் )
1. கர்மயோகம்:
முந்தைய ஆடியோ கேட்டால் இந்த கட்டுரை புரிவது சுலபம் : லிங்க் :
ஆடியோ 3
தர்மஹ என்றால் சரியான கடமையும் அதற்கான சரியான மன அமைப்பும். சாமானிய தர்மம் என்பது அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் ஒரே மாதிரியான மனப்பான்மை ; பொதுவாக மற்றவர் போலவே எல்லோரும் ஒப்பு கொள்வதுமான கடமை சாமானிய தர்மம். விசேஷ தர்மம் : வேறு வேறு மனிதர், நேரம், இடம் ஆகியற்றிற்கு பொருந்தும் கடமை. கடமை என்பது என்ன ? நியாதம் கர்மா என சொல்லலாம். அதாவது எதை செய்யாமல் விட்டால் மனசாட்சி உறுத்துமோ அதுவே கடமை. கடமையில் விருப்பு / ராகம் , வெறுப்பு / த்வேஷம், ஆகியன கூடாது. எல்லா கடமையையும் சமமாக பார்க்க வேண்டும். கடமை செய்யாமல் அனுபவிப்பது கூடாது. நமது கடமையினால் மற்றவர் பலன் எதிர்பார்ப்பார். அது அவர்களுக்கு உரிமை. அதே போல நமக்கும் மற்றவர் கடமையால் பலன் உண்டு. பலன் தவறினாலும் அவர்களை நேசியுங்கள். அதே பலனை கடவுள் தருவார் என நம்புங்கள். கடமையை கடவுளுக்காக செய்ய வேண்டும். மற்றவருக்காக செய்ய கூடாது. ஆனால் மற்றவர் கடமையை நாம் செய்ய கூடாது.
ஆடியோ 4
5. நமது கடமையினால் வேறு ஒருவர் பலன் பெற தவறினால் அதைப் பற்றி சிந்தனை தேவை இல்லை. இருந்தால் பிற்காலத்தில் கடமை தவறாமல் இருக்க உதவி செய்யும்.
கடவுள் நமக்கு தந்த கடமைகள் : நான்கு வர்ணம் . அதில் இரண்டாவதான கிருகஸ்தம் என்பதில் யக்ந்ஜம், தானம், தபம் இருக்க வேண்டும்.
யக்ந்ஜம் என்பது ஐந்து வகை: 1.1 தேவ யக்ந்ஜம், அதாவது பிரார்த்தனை. பிரார்த்தனை வேறு பூஜை வேறு. பிரார்தனை முக்கியம், அதில் எதிர்பார்ப்பு கூடாது... இங்கு ஒரு நிமிட ஆடியோ க்ளிக்...
1.2. ரிஷி யக்ந்ஜம்: சத்சங்கம். சொற்பொழிவு அல்லது புஸ்தகம் வழி அறிவு / ஞானம். 1.3. பித்ரு யக்ந்ஜம் : உள்ளவர் இல்லாதவர் ஆகியோரின் அர்ப்பணம் நமது வாழ்வில் இருக்கும் அல்லவா.. அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். 1.4. மனுஷ்ய யக்ந்ஜம் : குடும்பம் சமூகம் ஆகியவற்றிற்கு நாம் கடமை ஆற்றுவது ; 1.5. பூத யக்ந்ஜம் : வாய் பேசாத உயிர் இனங்களுக்கு நாம் கடமை செய்வது.
மேலே சொன்னதில் அடுத்தது தானம் : 2.1 : குரு வியாபாரம் செய்வது கூடாது ; சிஷ்யர்களுக்கு செல்வம் தருவது கூடாது ; லோபம் கூடாது ; நமது செல்வம் , நேரம் , அறிவு ஆகியவற்றை மற்றவருக்கு பிரித்து கொடுக்க வேண்டும்.

