நான் யார்? நமது பிறப்பும் வாழ்வும், பிரபஞ்ச விதியும், சிதம்பர ரகசியமும்
நீ ஏன் பிறந்தாய் என தெரியாது. எப்படி உன் பெற்றோருக்கு வந்து பிறந்தாய் என்பதும் தெரியாது. ஆனால் நீ பிறவி எடுக்க வேண்டும் என்பது விதி . ஏன், எப்படி ? அதற்கு முன் .. ..
இந்த பிரபஞ்ச (Cosmos or Universe ) விதி என்ன ? யார் இந்த பிரபஞ்சத்திற்கு தலைவர் ? அறிவியல் படி சக்தி எனப்படும் energy தான் தலைவர். இந்த பிரபஞ்சம் எப்படி உருவாகிற்று என்பது எந்த விஞ்ஞானியும் இதுவரை ஆணித்தரமாக நிரூபிக்காத ஒன்று.
இந்த சக்தி எனப்படும் energy யானது , தானே உருவாகி தானே அழியும் என்பது மட்டுமே எல்லோரும் அறிந்தது. இவ்வாறு உருவாகும் சக்தி தான் கடவுளாக (ராமர் கிருஷ்ணர் சிவன் ராமகிருஷ்ணர் விவேகானந்தர் ஆதி சங்கரர் ராகவேந்திரர் (இன்னும் பலர்) என்று பல உருவங்கள் உலகில் தானே உருவாகி மறைந்து போய் உள்ளனர். நாமும் இவ்வாறே பிறந்து மறைகிறோம். நாம் வாழ்வு எப்படி உருவாகியது என்பதை தெரிந்து கொள்ளும் முன் நமது முன் பிறவி என்ன ஆயிற்று என தெரிந்து கொள்வது அவசியம். சிந்திக்க வேண்டும்.
நாம் இறந்த பிறகு நம் உடலில் இருந்து உயிர் அல்லது ஆன்மா வெளியேறும்போது நடக்கும் அதிசயம் தான் நாம் பிறந்த ரகசியம். வேதத்தில் (பிரபஞ்ச சக்தியால் ஒலி வடிவாக படைக்கபட்டது) உள்ள உபநிஷதங்கள் சொல்வது என்ன வெனில் உயிர் என்பது ஒரு கண்ணுக்கு தெரியாத (ஒரு தலைமுடியின் அகலத்தில் , diameter, 1/10,000 பாகம் கொண்டது. இது காற்று வடிவம் கொண்டு ஏராளமான தகவல்களை தன்னுள் அடக்கியது. ஈதர் எனவும் புரிந்து கொள்ளலாம். இந்த ஈதர் இல்லாமல் உலகில் தகவல் பரிமாற்றம் communication இல்லை) . புரிந்து கொள்ள சுலபமாக கடவுள் என்பவர் இந்த ஈதர் வடிவில் உள்ளதாக வைத்துக் கொண்டால், நாம் இந்த உலகில் பிறந்த கடமை அல்லது பலனில் பாதி முடிந்து விட்டது என கொள்ளலாம். சிந்திக்க வேண்டும்.
ஆகவே, இந்த ஈதர் இல்லாத இடம் ஏதாவது உள்ளதா ? ஆகவே, logically , கடவுள் இல்லாத இடம் உள்ளதா ? ஆகவே, கடவுள் நம்முள் ஈதர் வடிவில் இருக்கிறார். இந்த ஈதர் உடலை விட்டு வெளியே போகும் போது இந்த உடலில் இருந்த, மனதில் இருந்த, மூளையில் இருந்த, மொத்த தகவலையும் எடுத்துக் கொண்டு வானில் கலந்து விட்டது. இது முடியாத ஒன்று அல்லது பொய் என நாம் விவாதம் செய்ய முடியாது. ஏனென்றால் இது பொய் என்றால், ஈதர் உலகில் transfer செய்த அத்தனை தகவலும் பொய்தான். ஈதர் இல்லை என்றால் தகவல் இல்லை. தகவல் இல்லை என்றால், உயிரோடு வெளி நாட்டில் உள்ளவர் வாழவே இல்லை அங்கு உயிர்களே இல்லை என சொல்ல முடியுமா ? சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு தகவலுடன் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒரு உயிர் தான் ஒரு உடலுக்குள் சக்தியாக நுழைந்து நாம் பிறவி எடுக்கிறோம். இப்போது முதல் பாராவும் இரண்டாவது பாராவும் மீண்டும் படியுங்கள். சிந்தியுங்கள். இந்த தகவலில் உள்ள உண்மைகளான உங்கள் செயல், எண்ணம் ஆகியவற்றை வைத்தே உங்கள் அடுத்த பிறவி ஆரம்பம் ஆகிறது.
இப்போது சொல்ல என்ன உள்ளது ? சிந்திக்கத்தான் நிறைய உள்ளது. கடவுள் எங்கும் உள்ளார். நாம் எண்ணுவது செய்வது எல்லாம் அவருக்கு தெரியும். அதாவது உலகில் பிறந்து மறைந்த எல்லா கடவுள் அவதாரங்களும் வானில் தான் உலவுகின்றன. நமது சிறிய உயிர் பிரிந்து அந்த பெரிய உயிருடன் ஐக்கியம் ஆகி விட்டது. நமது உயிரும் சக்தியும் சிறியது. வானில் இருக்கும் , உலவும் அந்த உயிரும் சக்தியும் மிக மிக பெரியது. சிந்திக்க வேண்டும்.
நமக்கு பிடித்த கடவுள் என்று நம்பிய அல்லது நம்பும் அந்த உயிர் உள்ள உருவத்தையோ அல்லது உயிர் இல்லாத உருவத்தையோ மனக்கண் முன்னே கொண்டு வந்து அதனுடன் பேசுங்கள். உங்கள் அன்பை அந்த உயிர் ஒப்புக்கொண்டால் அதுவே அல்லது அவரேதான் உங்கள் குரு. குருவே தான் தெய்வம். நாம் அவரை விரும்ப ஆரம்பித்த பிறகே அவர் நமக்கு குருவாக இருக்க முடியும். அந்த குருவை பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். எல்லா குருவும் என்ன விரும்புவார்கள் ? அவர் அறிவுரை என்ன ? அதை கண்டு கொண்டு அதை மட்டும் செய்யுங்கள். எல்லா குருவும் என்ன விரும்புவார்கள் ?
விருப்பு வெறுப்பு இல்லாத செயல்கள் அல்லது வாழ்வு.பொய் சொல்லாமல் இருப்பதுமற்றவருக்கு கெட்டது எண்ணாமல் இருப்பதுஒருவருக்கு உண்மையாக இருப்பதுஒரு சாதாரண, பகட்டு பொறாமை இல்லாத வாழ்வு வாழ என்ன அவசியமோ அதை மட்டும் விரும்புங்கள் அதை மட்டும் அடைய ஆசைப் படுங்கள்.உங்களது கடமைகள் என்ன என அறிந்து அதை கை விடாமல் செய்வது.சமுதாய நலனுக்கு பொருளால் அல்லது அறிவால் அல்லது உழைப்பால்/உடலால் உதவுவது
தர்மம் நியாயம் ஆகியவை வளர்க்க உதவுவது
எல்லா குருவும் எல்லா கடவுளும் இதைத்தான் சொல்லப் போகிறார்கள்.
உங்கள் குருவை தேர்ந்து எடுங்கள். (அவர் அதற்கு அனுமதி தருவார்.. அவர் தான் உங்களுக்கு குரு இல்லை என்றால் அவரே உங்களது குருவை உங்களுக்கு கை காண்பிப்பார்).
குருவை தினமும் தியானம் செய்யுங்கள். அவரிடம் அவரது படம் முன் அமர்ந்து தினமும் பேசுங்கள்.
உங்களது வாழ்வு உங்களுக்கு குரு கிடைத்த பிறகுதான் ஆரம்பிக்கிறது !!
(This Note is originally conceptualized by me from my understanding after reading of some explained Upanishad resources and from web sources of spiritual science research findings; acknowledging this note is individual preference )

