சினிமா தியேட்டரில் இருட்டில் இருக்கையைத் தேடி நடக்கும் ஒரு குருட்டு நடை போன்றது.


"என்ன திருப்பி திருப்பி"! 
சிந்தனை துளிகள் .. நீங்களும் படிக்கும்போதே சிந்தனை செய்யுங்கள். பிறகு நேரம் இருக்காது !!
  • பக்தியும் மதநம்பிக்கையும் கொண்ட பெற்றோர்கள்தாம் (தங்களுக்கு பிறந்த அல்லது இன்னும் பிறக்காத)  குழந்தைகளுக்காகவும் அல்லது பேரன் பேத்திகளுக்காகவும் அல்லது பிற்கால சந்ததியினர் நலனுக்காகவும்  பாவச்செயல்களில் ,  எண்ணங்களில் ஈடுபடாமல் தங்களது வசதிகளை குறைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். இவர்களால் தான் நாடும் வலுவடைகிறது. ஆனால் மேலை நாடுகளில் இப்படி இல்லா விட்டாலும், அவர்கள் நாடு வலுவடையும்.. ஏனென்றால் அவர்களுக்கு நாட்டுப் பற்று அதிகம்.  
  • மதத்திலும் கடவுள் நம்பிக்கையும்  கொண்டவர்களால் மட்டுமே  நல்ல  குணங்களை எளிதாக பெற்று தங்களையும் நாட்டையும் காப்பாற்ற, முன்னேற்ற முடியும் ; நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்ல  குணம் அவசியம். தேசபக்தியை தருவது மத நம்பிக்கை தான். மதத்தையும் கடவுளையும் நம்பாதவர்கள் நாட்டை எப்படி காப்பாற்ற முன்னேற்ற முடியும்? ஆகவே சில கட்சிகளுக்கு நாட்டை முன்னேற்றும் எண்ணத்தை விட கொள்ளையடிக்கும் எண்ணமே மேலோங்கியுள்ளது. 

இதற்கு முந்தைய பதிவுகள் 
  • நிறைய செயல்களை நாம் செய்ய மறப்பதற்குக் காரணம் ஆரம்பத்தில் அதைப்பற்றி ஆழமாக சிந்திக்காமல் விடுவதுதான். ஆழமாக சிந்தித்த வேலைக்கான யோசனை மறப்பதில்லை 

  • வயதானபின் அனுபவம் இருந்தும் தோல்வி ஏன் ? சிந்திக்க மறப்பது அல்லது சிந்தித்து வைத்ததை மறப்பது! A failure of "cut and paste" memory 

  • தோற்றம் எப்போதும் தோன்றுவது போல் இருப்பதில்லை; முதல் தோற்றம் பலரை ஏமாற்றுகிறது; மற்றவர்கள் தங்கள் மனதின் இடைவெளியில் கவனமாக மறைத்து வைத்திருப்பது சிலருடைய புத்திசாலித்தனத்தால் உணரப்படுகிறது. கெட்டதாகத் தோன்றுவது நல்லது என்று பின்னர் உணரலாம். 

  • முக்கிய தேவைகள் இலவசமாக கிடைக்கும் போது அதன் அருமை யாருக்கும் தெரியாது. உயிர் வாழ அவசியமான காற்று தண்ணீருக்கே அந்த நிலைமைதான் 

  • அகங்காரம் ஆணவம் ஆதிக்க மனப்பான்மை இவை மூன்றினால் விளையும் பொதுவான பலன் வியாபார அல்லது நாட்டு முன்னேற்றம். ஆனால் அவையே தான் குடும்பங்கள் குலைவதற்கு உலை வைக்கின்றன !

  • எதிர்மறையாக சிந்திப்பதும், துன்பத்திற்கு பயப்படுவதும் தீய சுழற்சிகள். இரண்டும் சுழற்சியில் ஒன்றையொன்று தூண்டுகிறது. அவை ஒருபோதும் முடிவதில்லை.

  • மூன்றாவது உலகப்போர் வராமல் இருக்க காரணமாக இருப்பது எல்லா நாடுகளிலும் உள்ள குடும்பம் என்ற அமைப்புதானே தவிர அமெரிக்காவில் உள்ள தனிநபர் சுதந்திரம் அல்ல. 

  • கல்வி அறிவாளிகளை  மட்டுமல்ல, புத்திசாலிகளையும் உருவாக்குகிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் 1940-களுக்கு முன்பே மக்களின் அறிவை விட அவர்கள் மனதை வைத்து  எழுதப்பட்டது. இப்போது அரசியலமைப்பை விட மக்கள் புத்திசாலிகள், காரணம் சட்டத்தில் தேவையான மாற்றங்களை கொண்டு வாராததே. 

  • 30 வயது வரை நம் வாழ்க்கை ஒரு இருண்ட சினிமா தியேட்டரில் முன்பதிவு செய்த அல்லது முன்பதிவு செய்யப்படாத இருக்கையைத் தேடி இருட்டில் நடக்கும் ஒரு குருட்டு நடை போன்றது. இருக்கை மற்றும் சினிமா இரண்டுமே  படத்தை ரசிக்கும் அளவுக்கு நன்றாக இருக்க வேண்டும். 
  • மக்கள் முன்னேற்றத்திற்கு புதிது புதிதான படிப்பும் ஆராய்ச்சியும் வேலைகளும் காரணமாக இருப்பினும் மக்களின் துன்பத்திற்கு காரணம் புதிது புதிதான உணவு வகைகளும் ஆடைகளும் வசதிகளும் தான். 

  • பயனுள்ள தகவலை (குடிநீர் போல ) நாம் தேடி எடுத்து வர வேண்டியுள்ளது. ஆனால் சினிமா சீரியல்கள் பிக்பாஸ் போன்ற குப்பை தகவல்கள் (சாக்கடை நீர் போல ) நம் வீடு தேடி வருகிறது. 
  • "சார், ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் (A.I.) அப்டிங்கறாங்களே அது என்ன சார்"? 🤔🤔🤔 அதுவா. அப்படீன்னா அதிகப்பிரசங்கித்தனம் னு அர்த்தம். எள்ளு கேட்டா அது எண்ணைக்கு னு கற்பனை பண்ணிக்கிட்டு  எள்ளுக்கு பதிலாக எண்ணையை குடுக்கறதுதான் அது.  😂😂😂. 
  • இப்போதெல்லாம் நல்ல செய்திகளை \  கருத்துக்களை ஆராய்ந்து வாட்ஸ்அப் பேஸ்புக் போன்றவற்றில் சிறு கட்டுரை போல  எழுதினால் படிப்பவர்கள் "நீஙகள் பத்திரிக்கையில் ஜர்னலிஸ்ட் ஆக போயிருக்கலாம்" என்பார்கள்.‌ எதற்கு என கேட்டால் "நிறைய பேர் படித்து தங்களுக்கென்று ஒரு கருத்தைப் புரிந்து கொள்வார்களே"  என்பார்கள். ஜர்னலிஸ்ட் எழுதுவதை எத்தனை பேர் படித்தார்கள் என கணக்கு எடுத்தால் பேப்பரை பார்த்தவர்களில் அல்லது  நியூஸ்மீடியாவில் அதைப் பார்த்தவர்களில் ஒரு சதவீதம் கூட அதை படித்திருக்க மாட்டார்கள். அதைவிட அதே சிறுகட்டுரையை வாட்ஸ்அப்பிலோ மற்ற சமூகவலையில் ஷேரிங் பார்வர்டிங் முறையில் படித்தவர்கள் அதிகமாக இருப்பார்கள். உதாரணத்திற்கு இப்போ நீங்களே இந்த கட்டுரையை  சில பேருக்கு ஃபார்வார்டு பண்ணுவீங்களே !! 
[மேலே உள்ளவை யாவும் சொந்த ஸாஹித்யம்தான் ! Updated 18/3/23 ]

... இந்த தளத்தின் முன் பாதி !! கற்றது பாதி பெற்றது மீதி