ராமாயணம், மகாபாரத நிஜமான நிகழ்வுகள் எந்த இடங்களில் ? 5 நிமிட வாசிப்பு

Total Readers: 31
சரித்திர காலத்தில் ராமாயணம், மகாபாரதத்தில் நடந்ததாக நம்பப்படும் , நிகழ்வுகளின்  இடங்கள் என்னென்ன ? அல்லது நடந்தனவா !  

நீங்கள் எந்த பதிலைப் பெறத் தயாராக இருக்கிறீர்கள் ?  பதில் அரசியலில் மூழ்கி சிக்கலாக உள்ளது !  அடிப்படையில் இரண்டு வகையான பதில்கள் உள்ளன: நம்பிக்கை அடிப்படையிலான பதில் அல்லது உண்மை அடிப்படையிலான பதில். 

நம்பிக்கையின் பேரில் வரும் பதிலை, ஆதார நூல்களிலும் வரலாறு ஆசிரியர்களிடமிருந்தும் விமர்சன பகுப்பாய்வு இல்லாமல் முழுமையான உண்மையாக ஏற்றுக்கொள்கிறோம் ; ஆனால்,  அளவிடக்கூடிய  மற்றும் சரிபார்க்கக்கூடிய சான்றுகள் உள்ளது என சொன்னால், அது  மக்களை எச்சரிக்கையாகவும் சந்தேகமாகவும் ஆக்குகிறது.

உதாரணமாக, குஜராத்தில் துவாரகா என்று அழைக்கப்படும் நகரத்திற்கு அருகில், இப்போது கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் நகரங்களின் தொல்பொருள் சான்றுகள் உள்ளன. இவை அநேகமாக 4,000 ஆண்டுகளுக்கு மேலானவை, அவை ஹரப்பா  காலத்திற்கு முந்தையவை. இது ஆதார உண்மை. ஆனால் மத ரீதியான நம்பிக்கையை   அடிப்படையாகக் கொண்ட பதில் என்ன ? "துவாரகா முடிவுக்கு வரும், அதன் அழிவு இதுதான் என காவிய மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது" என்பது. ஆனால், நம்பிக்கையின் படி பார்த்தால், அந்த காலம் 2,500 ஆண்டுகளுக்கு குறைவானது. இந்த இருவிதமான உண்மைகளையும் இணைக்க  போதுமான ஆதாரங்கள் இல்லை. 

இப்போது, ​​இந்துக்கள் நம்பிக்கை படி, காலம் ஒரு சுழற்சி சக்கரம்.  எனவே ஒரே ஒரு  ராமாயணமோ மகாபாரதமோ  இல்லை. இந்த இதிகாச  நிகழ்வுகள் ஒவ்வொரு சுழற்சியிலும் (கல்பம் ) மீண்டும் நிகழ்கின்றன. ஒவ்வொரு சுழற்சிக்கும் நான்கு கட்டங்கள் (யுகம்) உள்ளன, இரண்டாவது யுகம்  ராமாயண காலம். மூன்றாவது யுகத்தில்  மகாபாரதம்  நடைபெற்றது .  ஒவ்வொரு யுக சுழற்சிக்கும் இடையில் அனைத்து சரித்திர நிகழ்வுகளும்  உண்மைகளும் பிரளயம் உண்டாகி உலகின் முடிவு வந்து கரைந்துபோகும்போது மிச்சம் இருப்பது  வேதங்கள் மட்டுமே. எல்லா உயிர் இனங்களும் மீண்டும் புனர்ஜென்மம் அடையும் .  10,000 வருடங்களுக்கு முன்பு பனியுகம் (ice age) இருந்தது. பாதிக்கும் மேலே பூமி அதில்தான் இருந்ததாம். அதிலும் இதே குழப்பம்தான்.

ICE AGE - பனியுகம் (உயிரினம்)
கடைசி பனி யுகம், பூமியின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டபோது, ​​சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது. அதற்கு பின்பே ராமாயணம், மகாபாரதம் யுகம் வந்திருக்கலாம். பனியுகத்திற்கு பின்பே பிரளயம் வந்திருக்கலாம். 

விண்மீன்களின் நிலை மற்றும் கிரகணங்களின் நேரம் போன்ற வானியல் தகவல்களின் அடிப்படையில், ராமாயணத்தில் நிகழ்வுகள் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், மகாபாரதத்தில் நிகழ்வுகள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். வால்மீகி மற்றும் வியாச முனிவர்கள் இந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தனர், மேலும் கதையை பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமல்லாமல், அவர்களின் கதாநாயகர்களான ஸ்ரீராமன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அப்போதைய மக்கள்  சமூகத்துடன் ஈடுபட,  வேத ஞானத்தை பயன்படுத்தினர் என்பதை வெளிப்படுத்த காவியங்களை இயற்றினர். இருப்பினும், இந்த பாரம்பரிய பார்வையை விஞ்ஞானிகள் ஏற்கவில்லை.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பனி யுகத்திற்குப் பிறகு, உலகெங்கிலும், குறிப்பாக நதி பள்ளத்தாக்குகளில் மனித நாகரிகத்தின் வளர்ச்சியைக் காண்கிறோம். குகை ஓவியங்கள் மற்றும் பல்வேறு கற்கால கலைப்பொருட்கள் உறுதிப்படுத்தியபடி தெற்காசியாவில் குடியேற்றங்களை  காண்கிறோம். எகிப்து மற்றும் மெசொபொடேமியா-வுடனான வர்த்தக தொடர்புகளுடன், ஹரப்பா நகர நாகரிகம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆயிரம் ஆண்டுகளாக வடமேற்கில் உள்ள சிந்து மற்றும் சரஸ்வதி நதிகளைச் சுற்றி செழித்தது. காலநிலை மாற்றங்கள் மற்றும் சரஸ்வதி நதி நீர் இல்லாமல் வற்றிப் போனதே  இந்த நாகரிகத்தின் சரிவுக்கு வழிவகுத்தது. இங்கு என்ன மொழி பேசப்பட்டது என்பது  தெரியாது, எனவே அவர்கள் ராம் அல்லது கிருஷ்ணாவைப் பற்றி அறிந்திருக்கிறார்களா?  தெரியாது. அடையாளம் காணக்கூடிய ஒன்று  தியான வடிவில் இருந்த சிவன் படம் தான்.  ஹரப்பா நகரங்கள் இடிந்து விழுந்தாலும், ஹரப்பன் நாகரிகத்தில் காணப்பட்ட கருத்துக்கள் அழியவில்லை, அநேகமாக நாம் இந்திய கலாச்சாரம் என்று அழைக்கப்படும் ஆற்றின் பல துணை நதிகளில் ஒன்றாக விளங்கின.  சில தாவரங்கள், ஸ்வஸ்திகா சின்னங்கள் மற்றும் 5: 4 (ஒன்றரை மற்றும் ஒரு கால்) போன்ற கணித விகிதாச்சாரங்கள் ஆகியவையே நிரூபணம். பின் எப்படி சிந்து சமவெளி - ஹரப்பா நாகரீகம் சமஸ்க்ரிதம் கூடவும் வேதகால இதிகாசம் கூடவும் சம்பந்தம் ஆகிறது ? 

சுமாராக 5000 வருடங்கள் முதல் 3000 வருடங்களுக்கு முன் வரை சிந்து சமவெளி நாகரீகமும் கங்கை நதியை ஒட்டிய நாகரீகமும் உருவாகி நடந்து முடிந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. மஹாபாரத நிகழ்ச்சிகள்  கங்கை நதிக்கு வடக்கிலும் ராமாயண நிகழ்வுகள்  அதற்கு தெற்கிலும் நடந்ததாக வேத புராணங்கள் சொல்கின்றன.  மஹாபாரதத்தில் ஸ்ரீராமனை பற்றியும் அனுமனைப் பற்றியும் சொல்லப் படுவதால், ராமாயண காலம்தான் முதலாவது என கொள்ளலாம். இதற்கு முரணாக, நாகரீக வளர்ச்சியை கணக்கில் கொண்டால், ராமாயண காலத்தை விட மஹாபாரத காலம் சீர் மிக்கதாக இல்லை; அதாவது, ராமாயண காலம் இரண்டாவதாக இருக்குமோ என சந்தேகம் கூட எழலாம். 

காலம்தான் சற்று சரியாக வரையறுக்க முடியவில்லை என்றாலும் இந்த இரண்டு இதிகாசங்களில் நடந்த நிஜ நிகழ்வுகளை உறுதி செய்பவை பிற்பாடு எழுத்து மூலம் உறுதி செய்யப்பட்ட  சிந்து சமவெளியின் ஹாரப்பா, மொஹன்ஜாதாரோ நாகரீக வரலாற்றில் இடம் பெற்ற இடங்கள் பெயர்கள் ஆகையவைதாம்.  ராமாயணம், மஹாபாரதம் இரண்டுமே 2000 ஆண்டுகளுக்கு முன் வரை வாய்மொழியாகவே சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதில் சமஸ்க்ரித மொழியின் பங்கும், பிராமணர்களின் பங்கும் மிக அதிகம். மௌரியர்களின் ஆட்சிக்காலத்தில் மொழி எழுத்து வடிவத்தில் முன்னேற்றம் கண்டது. ராமாயணம் தமிழில் 1000 வருடங்கள் முன்பும், ராமாயணம் மஹாபாரதம் இரண்டுமே ஹிந்தியில் 500 வருடங்கள் முன்பும் எழுதப் பட்டிருக்கலாம்.  (முற்றும்)

மூலம் ஆங்கிலத்தில்: தேவதத் பட்டநாயக்.
தமிழில் மொழி மாற்றம் & சுருக்கம் : சரவணன் 
https://www.dailyo.in/variety/mahabharata-ramayana-sanskrit-indus-harappan-civilisation-ice-age-vedic-knowledge/story/1/14295.html