என்ன செய்யக் கூடாது Vs என்ன செய்ய வேண்டும் 😄😄😄😄

"துன்பம் இல்லாத வாழ்வு வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நேரான முறைகளை மட்டும் அல்ல. அதாவது, "என்ன செய்ய வேண்டும்" என்பது நமக்கு தெரியும். ஆனால் இன்னொரு கட்டளையும் உள்ளது. அதாவது "என்ன செய்யக் கூடாது" என்பது.
முதலாவது வெறும் கொள்கை வழி காட்டல் மட்டுமே. இரண்டாவது கட்டளையில் தான் நாம் நிறைய கற்றுக் கொள்கிறோம். இரண்டாவதில் தான் பயிற்சி (Practicals) உள்ளது. வாழ்வை பாசிட்டிவ் ஆக பார்க்க வேண்டும் என எல்லோரும் சொல்வார்கள்.
ஆனால் பாசிட்டிவ் ஆக மட்டுமே பார்க்க வேண்டும் என்றால் ஏன் துறவிகள், சத்குரு, ஆச்சார்யா போன்றவர்கள் ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை உதாரணம் காட்டுகிறார்கள் ? ஏனென்றால் அங்குதான் எப்படி வாழக்கூடாது என்பதும் காட்டப் படுகிறது. ராமாயணமும் மகாபாரதமும் பள்ளி, கல்லூரியில் பரீட்சைக்கு படிக்க வேண்டிய கற்பனை கட்டுரைகள் அல்ல. அது வாழ்ந்து கெட்டவர்களின் வரலாறு".

"துன்ப வாழ்க்கை என்பது ஒரு எல்லை தகராறு அல்லது வேலி பிரச்சனை தான். நம் மனதில் வேலி உள்ளது. எதை அண்ட விடக்கூடாது என்பதை நிர்ணயம் செய்யும் நுட்பமான அறிவு, ஞானம், உள்மனது ஆகியவை வேலிக்கு உள்ளே உள்ளது . வேலிக்கு வெளியே எது நம்மை அண்டக்கூடாதோ (ஆசைகள் கோபம் பொறாமை பயம் ஆகியன) அது காத்திருக்கிறது. இந்த நிலையில் வேலி அமைந்தால் அது இன்பமான வாழ்வு. இந்த இரண்டும் இடம் மாறி இருந்தால் அதுதான் துன்பமான வாழ்க்கை . இதுதான் எல்லை பிரச்சனை அல்லது வேலி தகராறு".