நாம் இறந்த பிறகு நமது முன்னோர்களை காண வழி உள்ளதா ? பிரபஞ்சத்தில் அவர்கள் எங்காவது இருப்பார்களா ?


1. நாம் இறந்த பிறகு நமது முன்னோர்களை காண வழி உள்ளதா ? பிரபஞ்சத்தில் அவர்கள் எங்காவது இருப்பார்களா ?

சந்திப்பது என்பது எந்த ரூபத்தில் என சொல்ல முடியாது. சந்திக்காமலும் போகலாம்.

2. சரி. இறந்த பிறகு நாம் எங்கே போகிறோம் ?

இந்த பிரபஞ்சம் ஏழு மேல் நிலைகளையும், ஏழு கீழ் நிலைகளையும் கொண்டது. (ஸ்தூல உடல் சூட்சம உடல் பற்றி ஏற்கனவே படித்தோம்)



சத்யலோகம்
மனம், ஆன்மா மேல்நிலை சூட்சமம்
தபோலோகம் மனம், ஆன்மா மேல்நிலை சூட்சமம்
ஜனலோகம் மனம், ஆன்மா மேல்நிலை சூட்சமம்
மஹர்லோகம் மனம், ஆன்மா மேல்நிலை சூட்சமம்
சுவர்க்கம் மோட்சம் மனம், ஆன்மா மேல்நிலை சூட்சமம்
புவர்லோகம் மனம், ஆன்மா மேல்நிலை சூட்சமம்
பூலோகம் (பூமி) உயிர் உடல் மனம் ஆன்மா
(அ ) உடல் மனம் ஆன்மா சூட்சம உடல், ஸ்தூல உடல்
பாதாளலோகம் 1 மனம், ஆன்மா கீழ் நிலை சூட்சமம்
பாதாளலோகம் 2 மனம், ஆன்மா கீழ் நிலை சூட்சமம்
பாதாளலோகம் 3 மனம், ஆன்மா கீழ் நிலை சூட்சமம்
பாதாளலோகம் 4 மனம், ஆன்மா கீழ் நிலை சூட்சமம்
பாதாளலோகம் 5 மனம், ஆன்மா கீழ் நிலை சூட்சமம்
பாதாளலோகம் 6 மனம், ஆன்மா கீழ் நிலை சூட்சமம்
பாதாளலோகம் 7 மனம், ஆன்மா கீழ் நிலை சூட்சமம்





மேலே வரிசையாக சொல்லி இருந்தாலும், அதே மாதிரி செங்குத்தாக, வெர்டிகலாக இவை அமைந்திருக்கும் என்று பொருள் அல்ல. அதாவது ஒரு ரூமில், கண்ணுக்கு தெரிந்த பொருள் வரிசையாக இருக்கலாம், அடுக்கலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாதவை எங்கு எப்படி இருக்கும் என சொல்வதற்கில்லை.


சூட்சம உடல் பாதாள லோகம் சென்று விட்டால் மீண்டும் மனிதனாக பிறவி எடுத்து புவர்லோகம்-ஸ்வர்க லோகம் வருவது கடினம். ("வாய்ப்பில்லை தம்பி!"😂). இன்று இருக்கும் உலக ஆன்மீக நிலையில், வெறும் 5% மக்கள் மட்டுமே ஸ்வர்க லோகம், அதற்கு மேலே செல்லும் வாய்ப்பு உள்ளதாம்.

இங்கு பூலோகத்திற்கும் ஸ்வர்க லோகத்திற்கும் இடையில் ஏன் புவர்லோகம் என்று ஒன்று உள்ளது ? ஏன் அது கடவுளிடம் இருந்து பிரிக்கப் பட்டுள்ளது ? ஆன்மீக நிலை குறைவாக இருக்கும்போது, நமது மனம், ஆன்மா ஸ்தூல வாழ்க்கையில் திருப்தி அடையாததால் மீண்டும் ஒருவேளை பூலோகம் திரும்பி சென்று, ஆன்மீக நிலையை உயர்த்திக் கொண்டு மீண்டும் மேல் நிலை சூட்சமத்தில் மோட்சம் அடைய வாய்ப்பு பெறுகிறது.

அதாவது, மக்கள் சமஷ்டி ஆன்மீக நிலை அல்லது வியாஷ்டி ஆன்மீக நிலை கொண்டு 50-60% ஆன்மீக நிலை இருந்தால் மட்டுமே ஸ்வர்க லோகம் செல்ல முடியும். சமஷ்டி என்பது சமூகத்திற்காக ஆன்மீக பணி , வியாஷ்டி என்பது தனக்காக.

சரி. முதல் கேள்விக்கு வருவோம். இறந்த பிறகு, மனிதன் எங்கு செல்கிறான் ? மேலே உள்ள எதிலும் இல்லை. இறந்த பிறகு பூலோகத்திற்கு மேலேயோ, கீழேயோ செல்வதற்கு முன்பு, இரண்டிற்கும் இடையில் (stop over , transit pass) மர்த்ய லோகத்தில் இருப்பார்கள்.

அடுத்த பாகத்தில் இரண்டாவது கேள்விக்கு விடை கண்டு பிடிக்கலாம்.