திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதில் என்ன தவறு?
திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதில் என்ன தவறு?
சிலர் நினைக்கின்றனர், ‘திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதில் என்ன தவறு உள்ளது’ என்று.
கலியுகத்திற்கு உள்ளே ஆழ நுழையும்போது வாழ்க்கை அதிக கஷ்டங்கள் நிறைந்ததாக துக்கம் நிறைந்ததாக மாறும்.
உலகம் முழுவதும் நடத்திய ஆன்மீக ஆய்வின்படி ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் 30% நேரம் மகிழ்ச்சியையும் 40% நேரம் துக்கத்தையும் அனுபவிக்கின்றனர்.
மீதமுள்ள 30% நேரத்தில், உதாரணத்திற்கு ஒருவர் தெருவில் நடந்து போகும்போதோ அல்லது வேறு சாதாரண அன்றாட அலுவலில் ஈடுபடும்போதோ அவருக்கு மகிழ்ச்சி அல்லது துக்கம் ஆகிய இரண்டுமே ஏற்படுவது இல்லை.
இதன் முக்கிய காரணம் பெரும்பான்மையோர் குறைவான ஆன்மீக நிலை கொண்டவராவர். அதனால் நம் செயல்களும் தீர்மானங்களும் பிறருக்கு துக்கத்தை வழங்குவதாக, சூழலில் உள்ள ரஜ-தம தன்மையை அதிகரிப்பதாக உள்ளது.
இதன் விளைவாக நாம் அதிக எதிர்மறையான கர்மாக்களை, கொடுக்கல்-வாங்கல் கணக்கை சேர்க்கிறோம். அதனால் பெரும்பான்மையினருக்கு அடுத்தடுத்து வரக்கூடிய பிறவிகள் அதிக துக்கம் தரக்கூடியதாக இருக்கும்.
பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்ப துறையில் உலகம் பெரும் அடிகளை எடுத்து வைத்திருந்தாலும் நமக்கு முந்தைய தலைமுறைகளோடு ஒப்பிடும்போது வாழ்வின் அடித்தளமான ஆனந்தத்தை நாம் தொலைத்து விட்டோம்.
நாம் அனைவருமே ஆனந்தமாக இருக்க விரும்புகிறோம். அடுத்தடுத்து எடுக்கப் போகும் பிறவிகள், நாம் அடைய நினைக்கும் இந்த நிரந்தரமான நீடித்திருக்கும் ஆனந்தத்தை தராது. ஆன்மீக முன்னேற்றமும் இறைவனோடு இரண்டறக் கலந்த நிலையுமே நிரந்தர ஆனந்தத்தை தர வல்லது.
Original content selected from spiritual science research foundation, Australia.
