வாழ்க்கையின் அர்த்தம் என்ன? - 1
நாம் ஏன் பிறக்கிறோம்?. ஆன்மீக கண்ணோட்டத்தில் நாம் பிறந்ததற்கு இரு காரணங்கள் உண்டு. அவையே நம் வாழ்வின் நோக்கத்தை நிர்ணயிக்கின்றன. அவை :
பிறரிடம் முன் பிறவியின் நமது கொடுக்கல் வாங்கல் கணக்கு என்பதை சரி செய்து கொள்வது. இறைவனிடம் ஐக்கியமாகும் நோக்கத்துடன் ஆன்மீக முன்னேற்ற பாதையில் சென்று அதன் மூலம் பிறப்பு-இறப்பு என்ற வாழ்க்கை சக்கரத்திலிருந்து விடுபடுவது.
முந்தைய பிறவிகளில் நாம் செய்த கர்மாக்களின் நேரடி விளைவாக நாம் செய்யும் நல்லது அல்லது கெட்ட செயல்களை பொறுத்து நமது கொடுக்கல்-வாங்கல் கணக்கை சேர்க்கிறோம். விதிமுறைப்படி தற்காலத்தில் நம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் 65% ஏற்கனவே நாம் பிறக்கும் முன்பே தீர்மானிக்கப்பட்டது. மீதி 35% மட்டுமே இப்பிறவியில் நம் கையில் உள்ளது.
நம் பிறப்பு, நம் குடும்பம், யாரை மணப்போம், நம் குழந்தைகள், தீவிரமான நோய்கள், இறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்த 65% ல் அடக்கம். நாம் நம் உடன்பிறப்புகளுக்கும் நெருக்கமானவர்களுக்கும் தரும் சுக துக்கங்கள், முன் ஜன்மத்தின் கொடுக்கல்-வாங்கல் கணக்கை அடிப்படையாக கொண்டவையே. மேலே அந்தப் படத்தைப் பாருங்கள் ....
இப்பிறவியில் கொடுக்கல்-வாங்கல் கணக்கை, விதியை நாம் முடித்தாலும் நாம் செய்யும் சில செயல்களால் புதிய கொடுக்கல்-வாங்கல் கணக்குகளை உருவாக்குகிறோம். இவை நம் ஒட்டு மொத்த கொடுக்கல்-வாங்கல் கணக்கான சஞ்சித கர்மாவுடன் சேர்கிறது. இதன் பலனாக இந்த கொடுக்கல்-வாங்கல் கணக்கை முடிப்பதற்கு இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியில் மாட்டிக் கொள்கிறோம். (தொடரும்..)

