Part-6 (of 7) பிரார்த்தனையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கை முத்திரை...

இதற்கு முன் பகுதி-5 படிக்க..
பிரார்த்தனை செய்யும் சரியான வழிமுறை பற்றிய சில குறிப்புகள்:உடல் வளைந்து இருக்க வேண்டும். விரல்கள் நெற்றிக்கு இணையாக நேர்க்கோட்டில், தளர்வாக இருக்க வேண்டும். விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து இருக்க வேண்டும் – விரித்து இருக்கக் கூடாது.கட்டைவிரல்கள் லேசாக புருவ மத்தியை தொட்டுக்
கொண்டிருக்க வேண்டும்.
உள்ளங்கைகளுக்கு இடையே மட்டும் சிறிது இடைவெளி விட்டு, இரு கைகளும் ஒன்றோடொன்று லேசாக அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். 50% ஆன்மீக நிலைக்கு மேலே உள்ள ஸாதகர்களுக்கு, உள்ளங்கைகளுக்கு இடையே இடைவெளி தேவையில்லை. 50% ஆன்மீக நிலையிலுள்ள ஒருவர் ஆன்மீக உணர்வுடன் பிரார்த்தனை செய்யும்போது என்ன நடக்கிறது? வரைபடத்தில் உற்று பார்த்து முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், அருகில் உள்ளவர்களுக்கும் அவருக்கு கிடைக்கும் தெய்வீக உணர்வின் பலன் கிடைக்கிறது. 
ஒருவர் உயர்ந்த ஆன்மீக நிலையில் இருக்கும்போது (50% மேலே), நேரடியாக பிரம்மரந்திரம் (உச்சந்தலை) வழியாக சூட்சும தெய்வீக அதிர்வலைகளை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. பிரம்மரந்திரம் என்பது கிரீட சக்கரத்திற்கு (சஹஸ்ரார சக்கரம்) மேலே உள்ள சூட்சும துவாரமாகும். தாழ்ந்த ஆன்மீக நிலை உள்ளவருக்கு இந்த சூட்சும துவாரம் மூடியிருக்கும். பிரம்மரந்திரம் திறப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கும் அகம்பாவம் இல்லாத பொது இந்த பிரார்த்தனை முத்திரையின் அவசியம் குறைகிறது.
பெரும்பான்மையினர் உயர் ஆன்மீக நிலையில் இல்லாததால், அவர்களால் பிரம்மரந்திரத்தின் மூலமாக தெய்வீக அதிர்வலைகளை கிரகிக்க முடிவதில்லை. எனினும், அவர்களின் விரல்நுனிகளின் மூலமாக (மிகவும் குறைந்த அளவிற்கு என்றாலும்) சூட்சும அதிர்வலைகளை கிரகிக்க முடிகிறது. ஏனென்றால், நம் விரல் நுனிகள், சூட்சும சக்தியை கிரகிக்கும் அல்லது வெளியிடும் நுண்ணிய உணர்ச்சி கொண்டவை. ஆன்மீகத்தில் இந்நிலையில் இருப்பவர்கள், பிரார்த்தனை முத்திரையுடன் பிரார்த்தனை செய்வது சிறந்தது. மற்ற எல்லா கூறுகளும் மாறாது இருக்கும் பட்சத்தில், பிரார்த்தனையை முத்திரையுடன் செய்யும்போது அதன் பலன், பிரார்த்தனையை முத்திரையுடன் செய்யாததைக் காட்டிலும் 20% அதிகரிக்கிறது . பிரார்த்தனையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கை முத்திரைகளைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது, அவற்றின் திறன் பற்றிய கீழ்க்கண்ட விளக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன..