Last Part 7/7 : ஆகவே மற்றவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்ய கூடாது.
...பிரார்த்தனையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கை முத்திரைகளைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது, அவற்றின் திறன் பற்றிய கீழ்க்கண்ட விளக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன:
பிரார்த்தனையின் பல்வேறு நிலைகளின் செயல்திறன். பிரார்த்தனை நிலையில் கீழே உள்ள படங்களின் வரிசையிலேயே அதன் செயல் திறனும், பலனும் இருக்கும்...முதல் படத்தில் உள்ள பிரார்த்தனை நிலைதான் அதிக செயல் திறன், பலன் இருக்கும்.

இதில் செயல் திறன் பலன் முழுவதும் எப்போது கிடைக்கும் ? கவனிக்க வேண்டியது என்ன ? கீழே உள்ள நான்கும் அவசியம்..
- முழு ஆன்மீக பயனை அடைவது, அதாவது இறைவனுடன் ஒன்றிணைவது.
- வெளிப்பட்ட தெய்வ தத்துவத்தின் நிலை உயர்நிலையாக இருத்தல்.
- கிடைக்கம் தெய்வ தத்துவத்தின் சதவிகிதம்.
- குறைவான தீய சக்தி; அதிகம் எனில் ஒரு ஸாதகரின் நம்பிக்கையைக் குலைக்க, அவரின் பிரார்த்தனையில் குறிக்கிடுவதை இது காண்பிக்கிறது. தீய சக்திகள் பிரார்த்தனை நிறைவேறக் கூடாது என்ற நோக்கத்தில் அதில் குறுக்கிட்டு, பிரார்த்தனை செய்பவரின் நம்பிக்கையைக் குலைக்கிறது. ஆகவே மற்றவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்ய கூடாது. (கட்டுரை முற்றும்; இந்த ஏழு பாக கட்டுரை பற்றிய உங்கள் கருத்து கீழே உள்ள கமெண்ட்ஸ் பெட்டியில் போடலாம். )