பகுதி-5 (7) : நெற்றியில் இருந்து இப்போது இதயத்திற்கு
இதற்கு முன் பகுதியில், பிரார்த்தனைக்கு விதிகள் என்ன என்று படித்தோம். அதில் இப்போது இரண்டாவது பற்றி பாப்போம்... பிரார்த்தனை முத்திரையின் இரண்டாம் நிலையின் விளக்கம்:
பிரார்த்தனையின் முதல் நிலை என்பது இரு கைகளையும் கூப்பி, கட்டை விரல்களை புருவ மைய சக்கரத்தில் (ஆக்ஞா சக்கரத்தில்) லேசாக தொடும்படி வைத்து வணங்குவது ஆகும்.
இந்த பிரார்த்தனை நிலையில் நாம் தலை வணங்கும்போது, அது நம்மிடம் உள்ள சரணாகதி உணர்வை விழிப்படைய செய்வதால், பிரபஞ்சத்திலுள்ள நமக்குத் தேவையான சூட்சும அதிர்வலைகள் செயல்பட ஆரம்பிக்கின்றன.
இந்த தெய்வீக அதிர்வலைகள் கட்டை விரல்களின் வழியாக புருவ மைய சக்கரத்திற்கு சென்று, நம் உடலில் நுழைகின்றன. இதன் விளைவாக, நம்முள்ளே இருக்கும் நேர்மறை ஆன்மீக சக்தி அதிகரித்து, நம்மை லேசாக உணரச்செய்கின்றது அல்லது, நம் உடல்ரீதியான அல்லது மனோரீதியான கஷ்டங்களின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கொடுக்கின்றது.
ஆரம்பத்தில் கைவிரல்களின் வழியாக உள்ளே நுழைந்த தெய்வ தத்துவத்தின் தெய்வீக உணர்வு, இப்பொழுது இதய சக்கரத்தின் (அநாஹத சக்கரம்) ஸ்தானமான மார்புப் பகுதியில் பரவி முழுமையாக கிரகிக்கும் செயல்பாடு நடக்கிறது.
பிரார்த்தனையை முடித்தவுடன், இரண்டாவது முத்திரையை செய்ய வேண்டும். அதாவது, கைகளை உடனே கீழே இறக்காமல், மணிக்கட்டு மார்பில் படும்படி கைகளை மார்புக்கருகில் கூப்ப வேண்டும். இதற்கு முன்பு பார்த்த படம் ஆரம்ப நிலை. இங்கே உள்ளது அடுத்த நிலை.
புருவ மைய சக்கரத்தைப் போலவே, இதய சக்கரமும் ஸாத்வீக அதிர்வலைகளை கிரகித்துக் கொள்கிறது. மணிக்கட்டை மார்புப் பகுதியில் வைப்பதால், இதய சக்கரம் செயல்படத் துவங்கி, அதிக ஸாத்வீக அதிர்வலைகளை கிரகித்துக் கொள்ள உதவுகிறது. இதய சக்கரம் விழிப்படைவதால், ஒரு ஸாதகரின் ஆன்மீக உணர்வும் பக்தியும் விழிப்படைகிறது. பிரார்த்தனை முத்திரையுடன் கூடிய இந்நிலையில் ஒருவர், மனதை உள்முகப்படுத்தி, இறைவனின் சந்நிதியில் உள்ள உணர்வை அனுபவபூர்வமாக உணர வேண்டும். (இன்னும் இரண்டு பாகத்துடன் முடிவுறும்).
⏳மெயின் மெனு செல்ல, மேலே இடது பக்கம் உள்ள ஏரோ ⬱ அல்லது மூன்று கோடுகள் மேல் க்ளிக் செய்யலாம்⏳