பகுதி-4 : கைகள், தலையின் எந்த நிலை வணங்குதலில் பிரார்த்தனை கைகூடும் ?
இதற்கு முன் பகுதியில், பிரார்த்தனைக்கு பலன் பெற விதிகள் என்ன என்று படித்தோம். அதில் முதலாவது ஒருவருடைய ஆன்மீக, பக்தியின் உயர்வு நிலை:
- நமது ஆன்மீக தரம் 60 % க்கு மேலே இருந்தால், பிரார்த்தனை தேவை இல்லை. ஆண்டவன் கட்டளைப் படியே ஒவ்வொன்றும் நடக்கிறது, எது வந்தாலும் எதிர் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் அது. அதுவே நம்பிக்கையும் கூட. அதற்கு மூலம் நன்றி தான்.
- இரண்டாவது, நமது ஆன்மீக பலம் 30%க்கும் கீழே இருப்பது. இந்த தரத்திற்கு வீரியம் இல்லை. மனோரீதியான பலம் தான். ஏற்கனவே படித்தவாறு, தெய்வீகத்தை தொட தடை போடும் ஒருவருடைய கர்வம், சுயநலம் தான் அதன் காரணம்.
- ஆகவே, வேண்டுதலுக்கு நேரடியான சராசரி பலன் நடுவில் உள்ள இந்த 30-60%க்குள் ஆன்மீக பலம் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது. மேலும், இந்த அணுகு முறை தனி நபர் பலன் தாண்டி சமுதாயம், உலகத்திற்கு பயன் படாது. அது துறவி மகான்களிடம் கூட இருக்காது.
- உலகில் 30%க்கும் கீழே ஆன்மீக பலம் உள்ளவர்களும் இருப்பதால், பொதுவான ஒரு அணுகுமுறை பயன் தராது என்பது இந்த மகான்களுக்கும் தெரியும். மேலும், அவர்கள் கடவுள் விருப்பபடி தான் நடக்க முடியும். அது ஆண்டவன் கணக்கு ! அதில் மகான்கள் 'மூக்கை நுழைக்க மாட்டார்கள்'😄! (இந்த ஆன்மீக பலம் ஒரு தனி பாடம். அதை இன்னொரு முறை தனியாக பார்க்கலாம்).
இந்த கட்டுரையின் ஆரம்ப கருத்தான "விஞ்ஞான முறைப்படி எப்படி பிரார்த்தனை பலன் தரும்" என்பது பற்றி இப்போது பார்க்கலாம். மேலே உள்ள படத்தை பார்க்கவும். இந்த வழிபாட்டு முறைப் படியே நமக்கு அதிக ஆன்மீக பலன் வருகிறது. இதில் இரண்டு தொடர் நிலைகள் இருக்கும். அதில் முதலாவது இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வணங்கும் முறையில் நம் கட்டை விரல் லேசாக புருவ மத்தியில் இருக்க வேண்டும். இந்த நிலைக்கு வந்த பிறகே, அதாவது தெய்வத்திடம் பேச, வேண்டுதல் ஆரம்பிக்க வேண்டும். உன்னைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை என்ற உணர்ச்சிபூர்வ பாவம் வர வேண்டும். இந்த உணர்வே பிரபஞ்சத்தின் தெய்வீக அலைகளை (vibration) நமது மனமும் உடலும் தொடுகிறது. நமது விரல்கள் தாம் ஆண்டெனா. கட்டை விரல் புருவ மத்தியில் உள்ள காந்த சக்கரத்தை தொடர்பு கொண்டு விரல்கள் கிரகித்த அலைகளை நம் உடலுக்குள் இழுத்துக் கொள்கிறது. இந்த அலைகள்தாம் நமக்கு வேண்டிய நிம்மதி, சாதுர்யம், பொறுமை ஆகியவைகளை நமக்கு தந்து அதன் மூலம் நமது கஷ்டங்களை வெல்ல உதவுகிறது. இதில் நமக்கு நம்பிக்கை இல்லை எனில், ரேடியோ டிவி இன்டர்நெட் இந்த எந்த தொழில் நுட்பத்தையும் நாம் நம்பக்கூடாது. இதுதான் பிரார்த்தனை பலன் முறை !
(இரண்டாவது நிலை: தொடரும்)

