பகுதி-2 : பிரார்த்தனை எப்படி பலிக்கிறது ??


பிரார்த்தனை : மதி நுட்பம், தாத்பர்யம் என்ன ? யார் நமது பிரார்த்தனைக்கு பதில் சொல்கிறார்கள் ?

உலக சுகம் (பொருள், பணம், புகழ்,...) வேண்டுபவர்கள் ஆன்மீக பயிற்சி செய்வதற்கும், ஆன்மீக பயிற்சி செய்பவர்கள் மற்றவற்றிற்கு ஆசைப் படுவதற்கும் வேறுபாடு உண்டு ! முதலில் சொன்னவருக்கு கீழ் நிலையில் உள்ள தெய்வமும், இரண்டாவதாக சொன்னவருக்கு அதைவிட மேலான நிலையில் உள்ள தெய்வமும் அவர்கள் பிரார்த்தனைக்கு பதில் அளிப்பார்களாம். மிக நுண்ணிய, மாறுபட்ட ஆற்றல் கொண்ட காற்றணுக்கள் வாயிலாகவும் இது நடக்கும். 



நாம் மற்றவர்க்கு கெடுதல் நினைத்தாலும் அதுவும் நடக்கும், ஆனால் அதை நடத்துவது நரகத்தில் உள்ள ஆற்றல் தான். நமது ஆசைகளும் லட்சியங்களும் ஐந்து வித தெய்வ சக்திகளால் நடக்கின்றன. நரகம், நடுநிலை, மஹர்லோகம்-ஜனலோகம், தபோலோகம்-சத்யலோகம், எல்லா லோகங்கள். அதாவது கண்ணுக்கு தெரியாத சக்தி (குறைந்த ஆன்மீகம் பயிற்சி செய்பவர்களுக்கு ), கண்ணுக்கு தெரியும் சக்தி (அதிக ஆன்மீக ஈடுபாடு) இரண்டின் மூலமும் நமது பிரார்த்தனை பலிக்கும்.   



விளக்கமாக உதாரணம் : ஒருவர் வேலை வேண்டி பிரார்த்தனை செய்கிறார். ஆனால் ஐந்து வருடம் வேலை இல்லாமல் திண்டாட வேண்டும் என்பது அவரின் கர்மா. இப்போது அவர் பிரார்த்தனை (ஆன்மீக பலன் வேண்டாதது) யார் பூர்த்தி செய்வார்கள் ? ஒரு கீழ்நிலை தெய்வம் தான். அதாவது இந்த தெய்வம் அந்த மனிதனுக்கு இப்போது ஒரு வேலை தந்து விடும் , ஆனால், பிறகு ஒரு சமயம் ஐந்து வருடம் வேலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது உத்தம தெய்வம்தான் அல்லது அதிக ஆற்றல் கொண்ட ஒரு சக்தி. ஏன் ? கர்மா தான்.


நம்மை சுற்றி உள்ள எதிர்மறை சக்திகளால் தான் நாம் நமது லட்சியங்களை அடைய முடிவதில்லை. பிரார்த்தனை செய்யும்போது நமக்கு முன்பே நாம் வணங்கும் கடவுள் நம்மைப் பார்த்துகொண்டே இருப்பதாக எண்ணி உரையாடுவது போலவே பிரார்த்திக்க வேண்டும். அவருக்கு நாம்  பயப்பட வேண்டாம். நமது  நண்பனை போலவே அவரை எண்ணிக் கொள்ளலாம். ஏற்கனவே அடைந்த பலனுக்கு  நன்றியுடன் நாம் வேண்டும் போது மிக நுண்ணிய ஆற்றல் கொண்ட சக்திகள் நமக்கும்  கடவுளுக்கும் இடையே ஒரு பாலமாக உருவாகி அதன் மூலம் நமது  வேண்டுதலுக்கு ஒப்புதல் தருகின்றன. இந்த ஆற்றலை நாம் காண முடியமா ? (அடுத்த பாகம்)