பகுதி-1 *பிரார்த்தனை என்பது என்ன?* அப்போது என்ன நடக்கிறது ?


*பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட பின்  பிரபஞ்ச அனுகூலம் (சக்தி/எனர்ஜி) எப்படி நம் உடலில் நுழைகிறது ?* ஒரு விஞ்ஞான பூர்வ பட விளக்கம்... 
பிரார்த்தனை நிறைவேறுவது என்பது ஒருவருடைய பக்தி அல்லது ஆன்மீக தரம் அல்லது ஆன்மீகத்தில் அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்துதான். ஆன்மீகத்தில் உச்ச நிலை அடைந்த துறவிகளால் (காஞ்சி மகா முனிவர், சாயி பாபா, போன்றோர்) பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியும். ஆனால் சில சமயம் விஞ்ஞான பூர்வமாக பிரபஞ்சத்தின் எதிர்மறை (NEGATIVE) எனர்ஜி கூட  பிரார்த்தனைக்குத்  தடங்கலாக  வரலாம். அவர்களுக்கே இந்த நிலை ! இந்த மொத்த கட்டுரையில்  ஒவ்வொரு பத்தி (PARA) க்கும் பெரிய விளக்கம் தரலாம். ஆனால் இப்போது இல்லை.


கடவுள் ஒருவருக்கு என்ன உறுதி செய்துள்ளாரோ, அதைத்தான் துறவிகளால் செய்ய முடியும். அதாவது கடவுளின் திட்டப்படி தான் ஆன்மீக குருக்கள், துறவிகள் நடக்க முடியும்.  ஆனால் சாதாரண மனிதன் பிரார்த்தனை முறையை மாற்றினால் ஓரளவு பிரார்த்தனை நிறைவேறும். அது பிரார்த்தனையின்  நோக்கம் என்ன என்பதே. சொந்த நலனா, உலக நலனா ? இரண்டும் இல்லை !

நமக்கு என்ன தேவையோ அது கிடைக்காமல் போக காரணம் மூன்று சொல்லலாம் : பொருள்கள் அல்லது நிலைகள் வேண்டிய ஆசைகள் , மனோபாவம், ஆன்மிகம். இதில் முக்கியமான காரணம் ஆன்மீகம் தான். அந்த ஆன்மீக அளவை உறுதி செய்வது நமக்கு ஆண்டவன் எழுதிய தீர்ப்பும், பித்ருக்களும்தான் ! இன்னும் இந்த கட்டுரையின் முக்கியமான பகுதி தொடங்கவில்லை. மேலே உள்ள கருத்துக்களை நாம் ஒப்புக் கொண்டால் மட்டுமே இனி வருவது புரியும்.... (அடுத்த பாகம்). கீழே உள்ள படத்தின் விளக்கம் இனி வரும் பகுதியில் படிக்கலாம். வெறும் படத்தை பார்த்தால் மட்டும் புரியாது. 


மெயின் மெனு செல்ல, மேலே இடது பக்கம் உள்ள ஏரோ ⬱ அல்லது  மூன்று கோடுகள் மேல் க்ளிக் செய்யலாம்⏳