ஐந்து பாதைகள் : ஐந்து இணை கோடுகள்

கிருஷ்ணர் ஐந்து விதமான பக்தி வழிகளை பகவத் கீதையில் சொல்லியுள்ளார். 

*நிர்குண உபாசனம்
இது தியான வகை. பிரம்மன் எனப்படும் கடவுள் உருவம் இல்லாத விழிப்பு உணர்வு. இந்த விழிப்பு உணர்வு எல்லா இயற்கையிலும் இருக்கிறது. இந்த பிரம்மன் நம் உடலிலும் உள்ளத்திலும் உள்ளது. ஆனால், யாவரும் தங்கள் உடலின் மீது ஆசை வைத்துள்ளதால் இது எல்லோராலும் உணர முடியாது என்பதால், கிருஷ்ணர் இன்னும் நான்கு வழிகளை சொல்கிறார்.





அடுத்தது, ஒவ்வொரு உண்டாக்கப்பட்ட (சிருஷ்டிக்கப்பட்ட)  உருவத்திலும் கடவுளைக் காண்பது. கடவுள் என்பது ஒரு சக்தி. அந்த சக்தியின் உருவம்தான் வேறுபடுகிறது. ஆகவே எல்லா சிருஷ்டியிடத்திலும் நாம் கடவுளை காண வேண்டும். 

அல்லது, நாம் ஏற்படுத்திய சிலை, படம் ஆகியவற்றின் மேலே நமது கவனத்தை செலுத்தி பக்தியை ஏற்படுத்திக் கொள்வது. எல்லாமே தெய்வீகம்தான். இதற்கு சகுன உபாசனம் என்று பெயர். இந்த வகையில் 33 கோடி தேவர்கள் இருப்பதாக இந்து மதத்தில் நம்புகிறோம். இந்த பக்தி வழியே நம்மில் மிகவும் பிரபலம்.


நான்காவது வழி தான் சேவை (தொண்டு காரியம்). நமது பக்தியை இந்த வழியில் செலுத்துகிறோம். இந்த சேவை செய்பவர்கள் ஓரிடத்தில் உட்கார்ந்து பக்தியில் லயிக்க முடியாது. எல்லா சேவைகளும் கடவுளுக்கே அர்ப்பணம் என்ற நம்பிக்கை. சுய நலம் இல்லாத சேவை.

ஐந்தாவது சேவை அல்லாத அல்லது காரியங்கள் - எதை செய்தாலும், அது ஆண்டவனுக்கே போய் சேரட்டும் என்ற அவா. நமக்கு என்ன கிட்டுகிறது அது ஆண்டவன் நமக்கு தந்தது. அவ்வளவுதான். அதை எல்லோருக்கும் பகிர்ந்து தருகிறோம். வருவதில் குற்றம் சொல்ல மாட்டோம். இதுவே கர்ம யோகம். கர்வம் இல்லாத கர்மா. 

   
இதை ஆங்கிலத்தில் எழுதியவர் : ஹஸ்முக் அதியா - முன்னாள் நிதி துறை செயலர், இந்திய அரசு. 

தமிழ் விக்கிபீடியாயில் மேலும் படிக்க https://ta.wikipedia.org/s/37tv

பக்தி யோகத்தின் சிறப்பு[தொகு]
மனதை வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் சீவனில் ஆத்மாவாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தில் மனதை லயித்து கொண்டிருப்பவர் அடையும் பேரானந்தத்தை, புலனுகர் போகங்களில் ஈடுபட்டுள்ளவன் அடைய முடியாது. எந்த விருப்பமும் இல்லாதவன், பொறிகளை அடக்கியவன், சாந்தமும், சமபுத்தியும் வாய்க்கப் பெற்றவன்; பிரம்மத்திலேயே மனதை நிலைநிறுத்தி நிறைவோடு இருப்பவன் எவனோ, அவனுக்கு எல்லாம் சுகமாகவே இருக்கும்.
பகவானிடத்தில் மனதை செலுத்தியிருப்பவன், பிரம்ம பதவியோ, சுவர்க்கத்தின் இந்திர பதவியோ, பூமண்டல பதவியோ, அல்லது பாதாளம் உள்ளிட்ட கீழ் லோகங்களையும் கூட விரும்பாது; அவன் பகவானிடத்தில் சரண் அடைந்து விட்டதால் பகவானைத் தவிர வேறு எதனையும் விரும்ப மாட்டான்.
யோகம், சாங்கியம், தர்மானுஷ்டானம், வேதாத்யயனம், தவம், தியாகம் ஆகியவைகள் பகவானிடத்தில் பக்தி செலுத்துவதால் கிடைக்கும் சுகத்தை விட ஈடானது அல்ல.
நம்பிக்கையுடன் கூடிய பக்தியால் மட்டும் பகவானை அடைய முடியும். பகவான், சான்றோர்களுக்குப் பிரியமானவன்; அவர்களின் ஆத்மாவாக இருப்பவன்; பிறப்பினால் சண்டாளனாக இருப்பினும் பகவானிடத்தில் செலுத்தப்படும் உறுதியான பக்தியினால் புனிதமடைகிறான்.
சத்தியம், தயை, தவம், நற்கல்வி இவைகள் உடையவனாக இருப்பினும், பகவானிடத்தில் பக்தியற்றவன் மேற்கூறியவைகள் அவனை பரிசுத்தப்படுத்துவது இல்லை.
பகவானிடத்தில் நிறைவான பக்தியுடையவன் சொல்லில் தடுமாற்றம் ஏற்படுகிறது. மனம் கசிந்து உருகுகிறது. சில நேரங்களில் அழுகிறான், சிரிக்கிறான், வெட்கத்தை விட்டு உரக்க பாடுகிறான். அவ்வாறு ஆடுகிற பக்தன் உலகத்தையே புனிதப்படுத்துகிறான்.
பகவானிடத்தில் பக்தி செலுத்துதல் என்ற பக்தியோகத்தால் கர்மவாசனையிலிருந்து நீங்கி, தன் இயல்பு வடிவான பரமாத்மாவை அடைகிறான்.
பொய்யான பொருள்களைப் பற்றிச் சிந்திப்பதை விட்டு, மெய்ப்பொருளான பிரம்மம் எனும் பகவானைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். மனதை பிரம்மத்தில் நிலை நிறுத்துவதே பக்தியோகத்தின் சிறப்பாகும்.
எனது தமிழ் ஆக்கம் எதற்கு ? ஒரு கருத்தை நமக்கு பழக்கம் இல்லாத ஒருவர் சொல்வதற்கும் நெருங்கிய ஒருவர் சொல்வதற்கும் நடுவில் ஒரு இடைவெளி இருக்கும் அல்லவா? அதை நிரப்பத்தான் !